Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மூன்று வேடத்தில் கமல் நடிக்கும் புதியபடம் மூ...?!

05 பிப், 2013 - 15:24 IST
எழுத்தின் அளவு:

விஸ்வரூபம் படத்தை தொடர்ந்து கமல் அடுத்து நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு மூ என்று பெயர் வைத்திருப்பதாகவும், இதில் கமல் மூன்று வேடத்தில் நடிக்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கமலின் விஸ்வரூபம் படத்திற்கு எழுந்த பிரச்னைகள் எல்லாம் ஓய்ந்து நாளை மறுதினம்(பிப்.7ம் தேதி) திரைக்கு வர இருக்கிறது. இதனைத்தொடர்ந்து விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை கமல் எடுக்க இருப்பதாக ஏற்கனவே ஒரு பேட்டியில் கமல் தெரிவித்து இருந்தார். அதுமட்டுமின்றி பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்பன் தயாரிக்கும் படத்தை கமல் இயக்கி, நடிக்கவும் இருக்கிறார்.

இந்நிலையில், கமல் அடுத்து நடிக்க இருக்கும் படத்திற்கு "மூ" என்று பெயர் வைத்திருப்பதாகவும், இதில் கமல் மூன்று வேடத்தில் நடிக்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஒரு பேட்டியின்போது எனது அடுத்த படத்திற்கான தலைப்பாக "மூ" என்பதை பதிவு செய்வேன் என்று கூறியிருந்தார்.

இதற்கிடையே விஸ்வரூபம் படத்தின் முடிவில் முல்லா உமர் அமெரிக்காவில் இருந்து தப்பி விடுவது போன்றும், இரண்டாம் பாகத்தில் முல்லா உமர் இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபடுவது போன்றும் அதனை கமல் முறியடிப்பது போன்றும் காட்சிகளை படமாக்க கமல் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, விஸ்வரூபம் படத்தை எடுத்தபோதே இரண்டாம் பாகத்துக்கான பெரும்பகுதியை கமல் முடித்துவிட்டதாகவும், இன்னும் சில காட்சிகளை அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் படமாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகமே "மூ" படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

விஸ்வரூபம் வெளியான கையோடு தனது அடுத்‌த படத்திற்கான அறிவிப்பை கமல் விரைவில் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (28) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (28)

சந்தோஷ் - Trichy,இந்தியா
06 பிப், 2013 - 17:59 Report Abuse
 சந்தோஷ் விருமாண்டி, சிவகுமார் போன்ற நல்ல ரசிகர்கள் உங்களுக்கு எப்பொழுதும் உண்டு கமல் சார். மற்ற மூதேவிகளை பற்றி நீங்கள் கண்டு கொள்ளாதிர்கள். உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம். ஒரு தமிழனாய்.
Rate this:
மொக்கையன் - chennai,இந்தியா
06 பிப், 2013 - 14:27 Report Abuse
 மொக்கையன் விஸ்வரூபம் படம் பார்த்தேன் ! இது கமல் செய்த வியாபார தந்திரமா ன்னு எனக்கு சந்தேகம் வந்துடிச்சி ...
Rate this:
மூல - singapore,சிங்கப்பூர்
06 பிப், 2013 - 13:38 Report Abuse
 மூல போடா மு பிலிம் ஓடாது
Rate this:
அசோக் குமார் - Trichy,இந்தியா
06 பிப், 2013 - 12:45 Report Abuse
 அசோக் குமார் கருமாந்திரம் புடிச்ச கதைகளை விட்டு தள்ளுங்கள். பேசாமல் நாகேஷ் சாரை கிராபிக்ஸில் உருவாக்கி சீரியஸ் காமெடி படம் பண்ணுங்கள் ப்ளீஸ்.
Rate this:
sasikumar - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06 பிப், 2013 - 10:32 Report Abuse
 sasikumar நீங்கள்தான் உலக நாயகன் வாழ்த்துக்கள்
Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in