Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வீடு, அலுவலகம் கட்ட இடம் தாருங்கள், விமர்சனங்களுக்கு கடிவாளம் : தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம்

19 செப், 2022 - 12:20 IST
எழுத்தின் அளவு:
Producer-Council-Meeting-resolution-details

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. சங்கத் தலைவர் முரளி ராமசாமி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

* தியேட்டர்களின் டிக்கெட் விற்பனையை தமிழக அரசு ஆன்லைன் மூலம் கண்காணிக்க வேண்டும்.

* டிஜிட்டல் நிறுவனங்கள் தயாரிப்பாளர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்,

* தயாரிப்பாளர்களுக்கு தமிழக அரசு வழங்கி வரும் மானியத் தொகையை ரூ.7 லட்சத்தில் இருந்து 15 லட்சமாக உயர்த்த வேண்டும்.

* பையனூர் திரைப்பட நகரில் தயாரிப்பாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி தரவேண்டும்.

* முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் 'டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி திரைத்துறை வாரியம்' என்ற பெயரில் வாரியம் அமைக்க வேண்டும்.

* தயாரிப்பாளர் சங்கத்திற்கு சொந்தமாக அலுவலகம் கட்டிக் கொள்ள சென்னையில் இடம் ஒதுக்கித் தரவேண்டும்.

* படம் வெளியான 3 நாட்களுக்கு பிறகே சமூக வலைத்தளங்களில் விமர்சனம் வெளியிடப்பட வேண்டும்.

* படம் பார்த்து விட்டு திரும்பும் ரசிகர்களிடம் படம் பற்றி கருத்து கேட்கும் மீடியாக்களை திரையரங்கிற்குள் அனுமதிக்க கூடாது .

* தனிப்பட்ட முறையில் விமர்சிப்பவர்களுக்கு திரைத்துறையினர் பேட்டி தரக்கூடாது.

* படப்பிடிப்பை அடிக்கடி நிறுத்தி பிரச்சினை செய்யும் லைட்மேன் சங்கத்தை பெப்சி கட்டுப்படுத்த வேண்டும்.

* இனி இரண்டு படங்கள் தயாரித்து அதனை குறைந்தபட்சம் 25 தியேட்டர்களில் வெளியிட்டவர்கள் மட்டுமே சங்கத்தின் நிரந்தர உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

* தயாரிப்பளர் சங்க நிர்வாகிகளின் பதவி காலம் 3 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.

* குறைந்தபட்சம் 2 முறை செயற்குழு உறுப்பினர்களாக பணியாற்றிவர்கள்தான் தலைவர் பதவிக்கு போட்டியிட முடியும்.

* சங்கத்தின் நிதி ஆதாரத்தை பெருக்க தனியாக குழு அமைக்கப்படுகிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
திரைப்படமாகிறது ஜானி டெப்பின் விவாகரத்து வழக்குதிரைப்படமாகிறது ஜானி டெப்பின் ... தனிப்பட்ட முறையில் விமர்சித்தால் நடவடிக்கை : துல்கர் சல்மான் எச்சரிக்கை தனிப்பட்ட முறையில் விமர்சித்தால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

19 செப், 2022 - 17:29 Report Abuse
naranam ஜால்ரா கூட்டம்! இடம் தரணுமாமே? எந்த அரசு வந்தாலும் அதுக்கு ஜால்ரா அடிக்க வேண்டியது!
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in