Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பெண் கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் மகேஷ்பாபு

16 செப், 2022 - 12:16 IST
எழுத்தின் அளவு:
Maheshbabu-supports-Handloom-weavers

கடந்த இரண்டு தினங்களாக மகேஷ்பாபு புதிதாக தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்த படத்தை திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்குகிறார். இந்த நிலையில் தெலங்கானாவில் உள்ள கைத்தறி நெசவு மேற்கொள்ளும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாகவும் அவர்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் விதமாகவும் மகேஷ்பாபு தன் மனைவியுடன் சேர்ந்து ஆதரவுக்கரம் நீட்டி உள்ளார்.

தெலுங்கானாவில் உள்ள நாராயணன்பேட் கிராமத்தைச் சேர்ந்த பெண் நெசவாளர்கள் தங்கள் தயாரிப்புகளை ஆன்லைன் மூலம் விற்பதற்காக ஆருண்யா என்கிற ஆன்லைன் விற்பனை தளத்தை துவங்கியுள்ளனர். மகேஷ்பாபு இது பற்றி தனது சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டு, கிராமத்து பெண்களின் திறமையை, குறிப்பாக நெசவாளர்கள் மற்றும் கலைஞர்களின் திறமையையும் உழைப்பையும் வெளிக்கொண்டு வந்து சுயதொழில் மூலமாக அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் இந்த தளத்திற்கு என்னுடைய ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமல்ல தனது மனைவி நம்ரதா சிரோத்கருடன் சம்பந்தப்பட்ட நெசவாளர் பெண்களையும் இந்த விற்பனை தளத்தின் பொறுப்பாளர்களையும் நேரிலேயே சந்தித்தும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
வசனங்களை மாற்றிய ஓடிடி : தள்ளுமால படக்குழுவினர் அதிர்ச்சிவசனங்களை மாற்றிய ஓடிடி : தள்ளுமால ... உன்னி முகுந்தன் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பந்தள ராஜா குடும்பத்தினர் உன்னி முகுந்தன் படப்பிடிப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
18 செப், 2022 - 04:44 Report Abuse
NicoleThomson ஆரூண்யாநாராயன்பேட் டாட் காம் என்பது அவர்களின் வலைத்தளம்
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
17 செப், 2022 - 03:41 Report Abuse
NicoleThomson ஆருண்ய அவுஸ் ஆப் சாரீஸ் என்று பெங்களூரு மல்லேஸ்வரத்தில் ஒன்று உள்ளது இரண்டும் ஒன்றா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in