Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஸ்வரூபத்தை ரசிகர்களுக்கு காணிக்கை ஆக்குகிறேன் - கமல்ஹாசன்!

05 பிப், 2013 - 08:33 IST
எழுத்தின் அளவு:

விஸ்வரூபம் படத்திற்கு எழுந்த பிரச்னைகள் முடிந்துள்ள நிலையில்  வருகிற 7ம்  தேதி படம் வெளிவரும் என்றும், இப்படத்தை ரசிகர்களுக்கு காணிக்கை ஆக்குவதாகவும் கமல்ஹாசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார். ‘விஸ்வரூபம்’ படம் தொடர்பாக கமல்ஹாசன்  வெளியிட்டுள்ள  அறிக்கையில்,

‘‘தடை பல கடந்து உங்கள் ‘விஸ்வரூபம்’ வரும் வியாழக்கிழமை 7ம் தேதி தமிழகமெங்கும் வெளியாக உள்ளது. நீதி சற்றே நின்று வந்தாலும், அன்றே ஆவனவெல்லாம் செய்து, எனக்கு உடன் உதவி செய்தமைக்கு தமிழக முதல்வருக்கு நன்றி. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக இந்திய மக்களுக்கும், என்னை தேடி வந்து ஆறுதல் சொன்ன தமிழ் திரையுலக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், எனக்கு தெரியாமலே எனக்காக போராடிய அகில இந்திய திரையுலகிற்கும் நன்றி.
என் உரிமையைத் தமதெனக்கருதி, பெரும் போர்க்குரல் எழுப்பிய செய்தி ஊடகங்கள் அனைத்திற்கும் ஒரு இந்தியனாக ஆழ்மனதிலிருந்து நன்றி.எதற்கும் கலங்காது புன்னகையுடன் இன்னல்களை ஏற்ற நான், ஒரு நிகழ்வினால் நெகிழ்ந்து, காதலாகி, கண்ணீர் மல்கி நிற்கின்றேன். என் தமிழக மக்கள் காசோலைகளையும், பணத்தையும் தபால் மூலம் அனுப்பி வைத்து, கலங்காதீர் ‘‘யாமிருக்க பயமேன்’’ என்ற அர்த்தத்தில் கடிதங்கள் இணைத்து அனுப்பி உள்ளனர். நெஞ்சு விம்மிக் கண்ணீர் காட்சியை மறைக்க என் மனது

‘‘இங்கிவரை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்’’ என்று கேவிக்கேவி பாடியது. என் கலையையும், அன்பையும் மக்கள் நலன் பயக்கும் சிறு தொண்டுகளையும் அன்றி வேறொன்றும் செய்வதறியேன். காசோலைகளையும், பணத்தையும் அன்புடன் திருப்பி அனுப்புகிறேன். உங்கள் விலாசங்கள் என் வசம். நாளை மதமும், அரசியலும் என்னை வரியவனாக்கினாலும், உண்பதற்கும் ஒதுங்குவதற்கும் அரிய பல விலாசங்கள் என் கைவசம் உள்ளது என்ற தைரியத்தில் இதை செய்கிறேன். நான் எங்கு சென்றாலும், எங்கு வாழ்ந்தாலும், என் நிரந்தர விலாசம் உங்கள் இனிய மனங்களே.பொறுமை காத்த என் ரசிக நற்பணியாளர்களுக்கு பெருவணக்கம். நற்பணி மன்றம் என்ற பெயர் காரணத்தை செயலாக்கிக்காட்டி ரவுத்திரம் பழகாமல், அகிம்சை பழகிய உங்கள் வீரம் சரித்திரத்தில் இடம் பெறும்.

வீரத்தின் உச்சக்கட்டம் அகிம்சை என்பதை ஊருக்கு எடுத்துக்காட்டிய என் ரசிக சகோதரர்களின் விஸ்வரூபத்தை வணங்கி, யாம் தயாரித்த விஸ்வரூபத்தை அவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன். ‘‘வாழிய செந்தமிழ் வாழ்க நற்தமிழர். வாழிய பாரத மணித்திரு நாடு.’’என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (43) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (43)

Venki Raja - mahalapye ,போஸ்ட்வானா
03 ஆக, 2013 - 10:47 Report Abuse
Venki Raja நீங்கள் முஸ்லிம் தான் காணிக்கை ஆக்கணும் அவர்கள் இல்லைஎன்றால் படம் 2 நாள் கூட ஓடியிருக்காது ....
Rate this:
senthil - covai,இந்தியா
19 பிப், 2013 - 14:23 Report Abuse
senthil நம் விஸ்வரூபம் வெற்றி அடைய என் வாழ்த்துக்கள், இது உங்களின் பொறுமைக்கு கிடைத்த வெற்றி
Rate this:
Mr y - chennai,இந்தியா
07 பிப், 2013 - 12:37 Report Abuse
Mr y உங்கள் தமிழுக்கு யாம் அடிமை... ஊட்டி விட்டால் வருவதில்லை..உள்ளத்தில் ஊரும் ஊற்று தமிழனின் முதல்... இவர்தான் தமிழ் திரையின் நம் முதலாளி
Rate this:
மொக்கையன் - chennai,இந்தியா
06 பிப், 2013 - 14:17 Report Abuse
 மொக்கையன் படம் பார்த்தேன் ! முதல் 20 நிமிடம் தான் நல்லா இருக்கு .. ஆப்கானிஸ்தான் காட்சிகள் ரொம்ப போர் ... அந்த வன்முறை டூ மச் ... இவ்ளோ கூத்து ஏன் பண்ணாங்கன்னு இப்போ புரியல ... படம் எனக்கு ரொம்ப சாதரணமா பட்டது ... ஞாயமா நாங்க தான் எதிர்ப்பு தெரிவிச்சு இருக்கோணம் ..
Rate this:
வசந்த் - TN,இந்தியா
06 பிப், 2013 - 05:54 Report Abuse
 வசந்த் Kamal has very well marketed rust as gold with the help of newspapers and his followers. Best drama ever enacted on earth.
Rate this:
மேலும் 38 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in