Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

“எழுந்திருங்க போனி கபூர்” : அஜித் ரசிகர்கள் கோபம்

10 செப், 2022 - 10:41 IST
எழுத்தின் அளவு:
Wake-Up-Boney-Kapoor-:-Ajith-fans-troll-the-porudcer

“அப்டேட், அப்டேட், அப்டேட்,” என அதிகமாகக் கேட்பது அஜித் ரசிகர்கள் தான். அஜித் நடித்து கடைசியாக வெளிவந்த 'வலிமை' படத்தின் அப்டேட்டை அஜித் ரசிகர்கள் எங்கெல்லாம் கேட்டார்கள் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். பிரதமர் மோடி வருகை, கிரிக்கெட் போட்டி என பல இடங்களிலும் 'வலிமை அப்டேட்' என குரல் எழுப்பி சர்ச்சைகளை ஏற்படுத்தினார்கள்.

அஜித் தற்போது நடித்து வரும் அவரது 61வது படம் குறித்த அப்டேட்டையும் படக்குழு சரியாக வெளியிடுவதில்லை. படத்தின் அப்டேட்டை விட அஜித் வெளிநாடு சென்றது, பைக்கில் சுற்றுலா செல்வது போன்ற விஷயங்கள்தான் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பரப்பப்படுகிறது.

ஒரு பக்கம் விஜய் நடிக்கும் 'வாரிசு' படம் பற்றிய அப்டேட்டும், விஜய் அடுத்து நடிக்க உள்ள அவரது 67 படம் பற்றிய அப்டேட்டுகளும் சமூக ஊடகங்களில் நிறைந்திருக்கின்றன. அஜித்தின் 61வது படம் தீபாவளிக்கு வெளியாகும் என்ற ஒரு பேச்சு இருந்தது. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்று பின்னர் தகவல் வெளியானது. கிறிஸ்துமஸ் விடுமுறையிலாவது வருமா அல்லது 2023 பொங்கலுக்காவது வருமா என அஜித் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

படத்தின் அப்டேட் வெளிவராத காரணத்தால் '#WakeUpBoneyKapoor” என தற்போது டிரெண்டிங் செய்து வருகிறார்கள். “நேர்கொண்ட பார்வை, வலிமை, அஜித் 61” என தொடர்ந்து அஜித் நடிக்கும் படங்களுக்கு போனி கபூர்தான் தயாரிப்பாளர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'வாரிசு' படத்தை விட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தும் 'விஜய் 67''வாரிசு' படத்தை விட திரையுலகில் ... சொத்து விபரங்களை தாக்கல் செய்ய அவகாசம் கேட்கும் விஷால் சொத்து விபரங்களை தாக்கல் செய்ய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

ramesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11 செப், 2022 - 11:46 Report Abuse
ramesh பணம் இருந்தா தானே ஷூட்டிங் போறதுக்கு அஜித் மலையாளி தயாரிப்பாளர் எல்லாமே பூண்டி ஆய்ட்டாங்கப்பா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in