ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இதுவரை கால்சீட் விசயத்தில்தான் விவகாரமான நடிகையாக இருந்து வந்தார் அனுஷ்கா. ஆனால் இப்போது காஸ்டியூம் விசயத்திலும் விவகாரமான நடிகையாக மாறி வருகிறார். அதாவது, பெரும்பாலும் பாடல் காட்சிகளில் நடிகர்- நடிகைகளுக்கு எந்த மாதிரியான காஸ்டியூம் அணிய வேண்டும் என்பது குறித்து சம்பந்தப்பட்ட படங்களின் இயக்குனர்கள்தான் முடிவெடுப்பார்கள். ஆனால் அனுஷ்காவைப்பொறுத்தவரை இந்த விசயத்தில் அவரையும் கலந்து பேசிய பிறகுதான் முடிவெடுக்க வேண்டுமாம்.
அதனால் அவரைப்பற்றி தெரிந்தவர்கள் முன்பே ஆலோசித்து வருகின்றனர். ஆனால் அனுஷ்காவின் சுயரூபம் தெரியாத இயக்குனர்கள் தாங்களே தனித்துவமாக முடிவெடுத்து விடுகின்றனர். அப்படி அவர்கள் முடிவெடுத்து விட்டால், பின்னர் ஸ்பாட்டுக்கு வந்ததும் செம குடைச்சல் கொடுக்கிறாராம் அனுஷ்கா. இந்த டிரஸ் எனக்கு கொஞ்சம்கூட மேட்சாக இல்லை. இதை அணிந்து கொண்டு என்னால் ஆடவே முடியாது என்று மூடே இல்லாமல் இருப்பாராம். சில சமயங்களில் இந்த காஸ்டியூமை மாற்ற சொல்லுங்கள். நான் சொல்வது போன்று ரெடி பண்ணுங்கள். அப்போதுதான் ஆடுவேன் என்றும் ஆர்டர் போடுகிறாராம். இதனால் கடைசி நேரத்தில் அவர் சொல்வது போன்ற காஸ்டியூம்களுக்காக படாதிபதிகள் அலையோ அலையென்று அலைகிறார்கள். சில நாட்களில் படப்பிடிப்பு நடைபெறாமல்கூட தடைபடுகிறாம். இதனால் அனுஷ்காவினால் பல லட்சங்கள் நஷ்டமடைகிறார்களாம் படாதிபதிகள்.