Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியின் ரோபோவை பின்னுக்கு தள்ளிய கமலின் விஸ்வரூப்...!

03 பிப், 2013 - 17:37 IST
எழுத்தின் அளவு:

கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம், ரஜினியின் ரோபோ படத்தின் முதல்நாள் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. கடந்த 25ம் தேதியே தமிழகத்தில் விஸ்வரூபம் படம் ரிலீஸ் ஆகவேண்டியது. ஆனால் முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பால் இப்படம் தடைபட்டது. அதேசமயம் தமிழகம் மற்றும் புதுவை தவிர்த்து ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இப்படம் ரிலீஸ் ஆனது. முதல்நாளில் இம்மாநிலங்களில் சில பிரச்னைகள் வந்தபோதும், அடுத்தடுத்த நாட்களில் படம் தொடர்ந்து சுமூகமாக ஓடத் தொடங்கியது.

வடமாநிலங்களில் கடந்த வெள்ளியன்று (பிப்-1-ம் தேதி) இப்படம் விஸ்வரூப் என்ற பெயரில் இந்தியில் ரிலீஸ் ஆனது. தமிழகத்தில் இப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பினாலும் வடமாநிலங்களில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி இப்படத்திற்கு எழுந்த பிரச்னைகள், இப்படத்தில் ‌என்னதான் இருக்கிறது என்று ரசிகர்களை படம் பார்க்க தூண்டியது. அதன்விளைவாக இப்படம் அங்கு நல்ல வசூலையும் பெற்றுள்ளது.

முதல்நாளில் விஸ்வரூபம் படம் ரூ.1.89 கோடி வசூலித்துள்ளது. தமிழ் படம் ஒன்று, மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்தளவு வசூல் ஈட்டுவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன் ரஜினியின் எந்திரன் படம் ரோபா என்ற பெயரில் இந்தியில் வெளியானது. இப்படம் முதல்நாளில் ரூ.1.75 கோடி வசூல் செய்து இருந்ததே முந்தைய வசூல் சாதனையாக இருந்தது. தற்போது அதனை கமலின் விஸ்வரூபம் படம் முறியடித்துள்ளது. இந்த வசூல் சாதனை முதல்நாள் வசூலை வைத்து மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (42) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (42)

hk.nazir - hongkong,சீனா
08 பிப், 2013 - 12:40 Report Abuse
 hk.nazir நானும் படத்தை பார்த்து விட்டேன்... சூப்பர் படம் எல்லாம் ஓகே ஆனால் எனக்கு சின்ன ஆட்சேபனை கமல் சாரிடம் உள்ளது ..அதாவது kb சாரிடம் ஒரு நிருபர்...கமல் சாரின் பலம் and பலவீனம் என்ன என்று கேட்டிருந்தார் அதற்கு kb சார் கமலின் பலவீனத்தை குறிப்பிடுகையில் கமலின் சமீபகால படங்களில் கமலின் நடிப்பில் அவர் அறியாமலே அவரிடம் ஒரு செயற்கை ஒட்டிக்கொண்டுள்ளது என்று கூறினார்.. ..அவர் சொன்னது போல் பழைய படங்களை போல் தற்போதைய படங்களில் கமலின் யதார்த்தமான நடிப்பை காணமுடிவதில்லை அது ஏன்...என்று தெரியவில்லை.
Rate this:
ஈஸ்வரன் - திண்டுக்கல் ,இந்தியா
08 பிப், 2013 - 07:49 Report Abuse
 ஈஸ்வரன் கமல் படம் எப்போதுமே ஏதாவது ஒரு பிரச்சினையை கிளப்பி விட்டு விளம்பரம் தேடி வசூல் பண்ணி விடுவார்.இது கமலோட எல்லாப் படங்களுக்கும் பொருந்தும்.
Rate this:
SIVA - RAMNAD,இந்தியா
07 பிப், 2013 - 12:29 Report Abuse
 SIVA எந்திரன் குப்பை. அதை விஸ்வரூபம் குட கம்பர் பண்ணி கமல் திறமையை அசிங்க படுத்தாதீங்க ப்ளீஸ்
Rate this:
velayutham.m - bangalore,இந்தியா
07 பிப், 2013 - 12:21 Report Abuse
 velayutham.m கமல் படத்தில் கமல் மட்டும் திறமை கண்பிக்க முடியும் ஆனால் ரஜினி படத்தில் எல்லோருக்கும் திறமை நிருபிக்க சான்ஸ் கொடுக்கப்படும் ,கமல் படத்தில் கருபர்களுக்கு சான்ஸ் கிடையாது ,அண்ணல் ரஜினி படதில் எல்லாருக்கும் வுண்டு .கமல் சிறந்த நடிகர் அனால் 4 தடவை மட்டுமே அவரால் நேஷனல் அவர்ட் வங்க முடிந்தது . இதை அவராஜ் அக பார்க்கும் பொது .2% மட்டும் . collection record only can do rajinin in india .it is 100% true
Rate this:
Moin Ahmed - Chennai,இந்தியா
07 பிப், 2013 - 11:35 Report Abuse
Moin Ahmed கமல் டேலன்ட் என்பதை விட தான் டேலன்ட் என பலர் சொல்ல வேண்டும் என முயற்சி செய்பவர் .................சில நேரங்களில் திமிர் கலந்த நடிப்புகள் செய்து ...................
Rate this:
மேலும் 37 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in