பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாளத்தில் பத்மப்ரியா நடிச்ச படம் "நம்பர் 66 மதுர பஸ்". இதை நிஷாத் என்பவர் தயாரித்தார். இயக்குனரும் அவரே. படப்பிடிப்பு நடக்கும்போது இவர் பத்மப்ரியாவுக்கு பேசியபடி சம்பளம் கொடுக்கவில்லை. சம்பளத்தை கேட்ட பத்மப்ரியா மானேஜரையும் அவமானப்படுத்தினார். பத்மப்ரியா பற்றியும் தவறாக பேசினார். இதனால் கோபம் அடைந்த பத்மப்ரியா படப்பிடிப்புக்கு செல்லாமல் இருந்தார். அதன் பிறகு பத்மப்ரியாவிடம் நிஷாத் மன்னிப்பு கேட்டார். பத்மப்பரியா படித்தில் நடித்துக் கொடுத்தார். எப்படியாவது படத்தை முடிக்க வேண்டும் என்று பணிந்து நடந்து கொண்ட நிஷாத் பட வேலைகள் முடிந்ததும் தன் வேலையை காட்ட ஆரம்பித்தார்.
பத்மப்ரியாவால் எனக்கு பல லட்சம் நஷ்டம் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் வாசித்தார். உடனே தயாரிப்பு சங்கம் பத்மப்ரியாவுக்கு தடை விதித்தது. இதனால் ஆத்திரமடைந்த பத்மப்ரியா மலையாளப் படமே வேண்டாம் என்று அமெரிக்காவுக்கு படிக்கப் போய்விட்டார். திரும்பி வந்த அவரிடம் தேயைவில்லாம வீம்பு செய்து வாய்ப்புகளை கெடுத்துக்க வேண்டாம் என்று ஆலோசனை சொல்ல, பத்மப்ரியாவும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு மன்னிப்பு கடிதம் அனுப்பி விட்டார். இதனால் அவர் மீதுள்ள தடை நீக்கப்பட்டுவிட்டது. பத்மப்ரியா தமிழ் நாட்டு பெண் என்பதால் மலையாள சினிமாவில் எந்த ஆதரவும் இன்றி தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்.