Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? கோலிவுட்டில் புதிய பிரச்னை வெடித்தது!

02 பிப், 2013 - 11:49 IST
எழுத்தின் அளவு:

 போர்ப்ஸ் என்ற பத்திரிகையின் இணைய தளத்தில் கோலிவுட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்றொரு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தற்போது 62 வயதாகும் ரஜினிகாந்த், சுமார் 24 வருடங்களுக்கு மேலாக சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார். ஆனால் சமீபகாலமாக அவர் இரண்டு வருடத்துக்கு ஒரு படம் என்று பட எண்ணிக்கையை குறைத்து வருகிறார். அதனால் அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் என்ற தகுதி தமிழ் சினிமாவில் யாருக்கு இருக்கிறது? என்றொரு கேள்வியையும் முன் வைத்துள்ளது.

ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக தற்போது விஜய், அஜீத் இருவரும்தான் இருக்கிறார்கள். இவர்களில் அதிக ரசிகர்கள் யாருக்கு இருக்கிறார்கள். யாருக்கு ரசிகர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகமாக இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு அவரை சூப்பர் ஸ்டார் என்று அழைப்பார்கள். விஜய், அஜீத்துக்கு அடுத்தப்படியாக சூர்யா, விக்ரம் ஆகியோரும் இந்தப்பட்டியலில் இருக்கின்றனர். ஏற்கனவே அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பிரச்னை கோலிவுட்டில் முன்பொரு முறை ஏற்பட்டு பின்னர் அது அடங்கி விட்டது. ஆனால் இப்போது போர்ப்ஸ் இணைய தளம் தீ பற்ற வைத்து விட்டிருப்பதால், முன்னணி நடிகர்கள் மத்தியில் யார் அந்த பட்டத்தை கைப்பற்றுவது என்கிற திரைமறைவு வேலைகளில் படு தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் எந்த முன்னணி சினிமா ஜாம்பவான்களின் வாயிலிருந்து அந்த வார்த்தை முதலில் வெளிப்படுகிறதோ அந்த நடிகரே அடுத்த சூப்பர் ஸ்டார் என்கிற பெருமை பெறுவார்கள். அதற்கான சந்தர்ப்பத்தை அனைவருமே ஆவலுடன் எதிர்நோக்கத் தொடங்கியுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (397) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (397)

rsudha - chennai,இந்தியா
10 பிப், 2013 - 23:28 Report Abuse
 rsudha தல
Rate this:
Anu - colombo,இலங்கை
07 பிப், 2013 - 12:09 Report Abuse
 Anu Ajith
Rate this:
ganesh - sivakasi,இந்தியா
05 பிப், 2013 - 13:54 Report Abuse
 ganesh அஜித் மட்டும்தான்
Rate this:
ராஜா - Chennai,இந்தியா
05 பிப், 2013 - 12:14 Report Abuse
 ராஜா விஜய்க்கு ரசிகர்கள் அதிகமா இருந்தாலும் டோடல் தமிழ் மக்கள் கிட்டயும் மரியாதையை மதிப்பு இருக்குறது அஜித் மேல தான். அப்பா நீங்களே முடிஉ பண்ணிகொங்க. ரசிகர்களை அரசியலுக்கு எழுபது நல்ல நடிகனுக்கு நல்லதா இல்ல உங்க குடும்பத்த முதல பாருங்க அப்புறமா என்னோட படாத பாருங்கன்னு சொல்லுறது நல்லதா
Rate this:
ஆருரான்.r - pondicherry,இந்தியா
05 பிப், 2013 - 05:38 Report Abuse
 ஆருரான்.r சார் ரஜினி இருக்கும்போது இந்த வாக்குவாதம் தவறானது .150 படங்களை வெற்றி படமாக்கிய பெருமை அவர் ஒருத்தருக்குத்தான் சேரும்
Rate this:
மேலும் 392 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in