கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
"வேள்வி" படத்தின் மூலம் அறிமுகமானவர் ஹாசினி. முதல் படத்திலேயே வில்லனை பழிவாங்க அவனை பாலியல் பலாத்காரம் செய்யும் பெண்ணாக நடிச்சு அதிர வைத்தார். அதன் பிறகு அரும்பு மீசை குறும்பு பார்வை, காதல் அல்ல அதையும் தாண்டி, விஜயநகரம் உள்பட பல சின்ன சின்ன படங்களில் நடிச்சார். எல்லாமே ஃபிளாப்பாகி ஹாசினியை யாருக்கும் தெரியாமல் செய்து விட்டது. சரி இனிமேல் நடிப்பே வேண்டாம் என்று அமெரிக்காவில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்றுவிட்டார். அங்கு சினிமா சம்பந்தமான காலேஜ்ல சேர்ந்து இயக்கம், அனிமேஷன் படிச்சாராம். இப்போ திரும்பவும் சினிமால நடிக்கிறதுக்கு திரும்பி இருக்கார். முன்னை விட ரொம்ப அழகாவும், வாளிப்பாவும் இருக்கார். "முதல் படத்துலேயே புரட்சிகரனமா கேரக்ட்ர்ல நடிச்சேன் அதுக்கு பிறகும் யாரும் என்னை கண்டுக்கல. படங்களை செலக்ட் பண்ணத் தெரியாம கண்ட படங்கள்ல நடிச்சு என் கேரியரை நானே கெடுத்துக்கிட்டேன். அதான் சினிமா பற்றி படிக்கலாமுன்னு அமெரிக்கா போயிட்டேன். 6 மாசம் அக்கா வீட்டுலேருந்து படிச்சிட்டு இப்போ திரும்பியிருக்கேன். இனி நல்ல கதைகள் அமைஞ்சா மட்டும் நடிப்பேன்" என்கிறார். ஹாசினி அமெரிக்கா சென்றது உடம்பை அழகாக்கும் சிகிச்சைகாகத்தான் என்றும் சொல்றாங்க.