Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எனக்கு ஏற்பட்ட நிலை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது: கமல்

31 ஜன,2013 - 18:05 IST
எழுத்தின் அளவு:

இந்தி விஸ்வரூபத்திற்காக மும்பை சென்று இருக்கும் கமல், செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசும்போது, எனது படத்தை தடை செய்தது எனக்கு ஏற்பட்ட அவமானம் அல்ல தேசத்திற்கு ஏற்பட்ட அவமானம். எனக்கு ஏற்பட்ட பிரச்னைகள் போன்று வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது. சினிமா கலைஞர்களும், ரசிகர்களும் கொடுத்த ஆதரவால் தான் இப்போது நான் இங்கு நிற்கிறேன். நான் யாரையும் புண்படுத்தும் வகையில் படத்தை எடுக்கவில்லை. படத்தை பார்க்காமலேயே சிலர் படத்தில் தவறான காட்சிகள் இருப்பதாக கூறுகின்றனர். அப்படிப்பட்ட காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை. இந்தபடத்திற்கு நான் எதிர்கொள்ளும் பிரச்னை மத ரீதியானது கிடையாது. அரசியல் ரீதியான பிரச்னை.

இதுபோன்று ஒருநிலை மீண்டும் ஏற்பட்டால் நிச்சயம் இந்தியாவை விட்டே நான் வெளியேறுவேன், அதில் மாற்றமேயில்லை. இப்படி பேசுவதால் நான் மிரட்டுவதாக யாரும் எண்ணம் வேண்டாம், கோபம் தான் வருகிறது. விஸ்வரூபம் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள் என்று முதல்வர் கூறியிருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்தபடத்தின் மூலம் நான் பப்ளிசிட்டி தேடிக்கொள்வதாக சிலர் கூறுகின்றனர். நிச்சயமாக கிடையாது. சரியான தேதியில் படம் ரிலீஸ் ஆகாததால் தனக்கு ரூ.30 கோடி முதல் 60 கோடி வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது. தயது செய்து கலைஞர்களை இதுபோன்று புண்படுத்தாதீர்கள் என்றார்.

Advertisement
கமலுக்காக தலைவா ஷூட்டிங் நிறுத்திய விஜய்...!கமலுக்காக தலைவா ஷூட்டிங் நிறுத்திய ... கமலின் பேட்டியால் எனது இதயத்தில் ரத்தம் கசிந்தது! தனுஷ் உருக்கம் கமலின் பேட்டியால் எனது இதயத்தில் ...

வாசகர் கருத்து

anand - bangalore,இந்தியா
01 பிப்,2013 - 19:02
 anand dear sir Yes have to go out of India that is right discussion - don’t give one more chance to this people Will not appreciate talent, they find remarks always We can't change India - we can change your film make history next generation will study
ப.saravanan - tirupur,இந்தியா
01 பிப்,2013 - 15:10
 ப.saravanan உச்சி மீது வானிடிந்த போதிலும் அச்சமில்லை ,அச்சமில்லை அச்சம் என்பதிலையே ...>>>>>>>>>
MRavikumar - Chennai  ( Posted via: Dinamalar Windows App )
01 பிப்,2013 - 13:48
MRavikumar உங்களுக்கு பிரச்சணை ஒன்றும் புதிதல்ல நீங்கள் எங்கும் செல்ல வேண்டாம் நீங்கள் விதயாய் இருங்கள் நாங்கள் செடியாய் முளய்ப்போம்
அசோக் - Kuala Lumpur,மலேஷியா
01 பிப்,2013 - 12:37
 அசோக் முதல்வர் செய்ய வேண்டிய வேலைகளை விட்டு விட்டு கமலுடன் தேவையல்லாத வேலை இது ..
Suresh - Singapore,சிங்கப்பூர்
01 பிப்,2013 - 11:55
 Suresh Hello Kamal, you can take Tamil movies outside India
ஏடு கொண்டலு - chennai,இந்தியா
01 பிப்,2013 - 11:41
ஏடு கொண்டலு ஒரு குடிமகனின் பேச்சுரிமையை ஒடுக்கும் தீய சக்திகளுக்கு எதிராக ஒன்று படுவோம்.
jeeva - pondicherry,இந்தியா
01 பிப்,2013 - 11:07
 jeeva very sad news
mirudan - kailaayam,இந்தியா
01 பிப்,2013 - 10:58
 mirudan திரு. கமல் அவர்களே விழுந்தாலும் மரமாவேன் என்றீக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை வளர்த்தீர்கள், அதை நாட்டை விட்டு போய்தான் செய்ய வேண்டும் என்றில்லை அதை இங்கேயே இருந்து திட்டம் போடுங்கள் செயல் படுத்துகள், எதிரி மண்டியிடும்படி செய்யுங்கள் மக்கள் உங்கள் பக்கம் தான்
ஆனந்த் - theni,மாசிடோனியா
01 பிப்,2013 - 10:43
 ஆனந்த் நீங்கள் கூறியது போல் இது மதரீதியான பிரச்னை இல்லை அரசியல்ரீதியான பிரச்னை. போராட்டம் நடத்தும் சில பேர். இத்தனை நாள் வந்த தீவிரவாதி படம் பார்க்கவில்லையா. மதம் பிறந்து பல வருடம் ஆச்சி ஆனா இப்போதான் அந்த உணர்வு வருத.
குமரேசன் .மு - Hochimin city ,வியட்னாம்
01 பிப்,2013 - 10:34
 குமரேசன் .மு நீங்கள் நினைத்தது வேறு உண்மையில் நடந்தது வேறு இது போன்று பிரச்சினைகள் வரும் என்று எதிர்பார்த்து TTH -யில் வெளியிட விரும்பினீர்கள் மற்றும் போட்ட முழு பணத்தை எடுத்துவிடலாம் என்று ஆனால் உங்கள் பங்காளிகள் (தியேட்டர் உரிமையாளர்கள் ) முதுகில் குத்தி விட்டார்கள் ,எனவே இதுவும் நாம் படித்த படம் மற்றும் அனுபவம் என்று நினைத்து கொள்ள வேண்டியது தான் ,அரசியல் உலகில் இதுவெல்லாம் சர்வ சாதாரணம்
kaarththik - Kuala Lumpur,மலேஷியா
01 பிப்,2013 - 10:30
 kaarththik எம்மதமும் எனதில்லை என்பதானது மாலுமி இல்லா மரக்கலம் போன்றது. இப்படித்தான் முட்டிக்கொண்டும் மோதிக்கொண்டும் செல்ல வேண்டி இருக்கும். தனக்கு தானே வைதுக்கொள்ளும் ஆப்பு இது. அதாவது, உதிக்கும் போது விதிக்கப்பட்டது. அடுத்தவரை குறை சொல்லக்கூடாது.
siva - trichy,இந்தியா
01 பிப்,2013 - 10:23
 siva சார் .......
அப்பு - madurai,இந்தியா
01 பிப்,2013 - 10:08
 அப்பு யோவ் போயி பொழப்ப பாருங்க.இவனுக எம்பது, நூறு கோடின்னு செலவழிப்பானுக..காசு வந்தா ஆடுவானுக காசு போனா கெக்கலிப்பானுக..உருப்படியா சமூக படம் எடுங்க..மக்கள் பொழுது போக்கா பாக்கிற சினிமால மதம் சமந்தமா அழுத்தமான கதை அல்லது காட்சி அமைப்புகளை தவிர்ப்பது சினிமா தொழில இருக்கவங்களுக்கு அழகு.அழுக்கை வெளியேற்றி வெள்ளையை முன் கொண்டு வந்து மக்களை கவருங்கள் நீங்களும் சம்பாரியுங்கள்.
மோகன்ராஜ் - pondicherry,இந்தியா
01 பிப்,2013 - 09:57
 மோகன்ராஜ் அன்பே சிவம் -- யு லவ் இட்
சரம் rajesh - chennai,இந்தியா
01 பிப்,2013 - 09:49
 சரம் rajesh தலைவா கவலை வேண்டாம் உன்னக்காக நான் இருக்கிறேன்......,
ராஜி - Toronto,கனடா
01 பிப்,2013 - 09:40
 ராஜி Dear Kamal Sir, Why don't you take the movie in English. Atleast we should understand what try to say. Don't loose your heart.
Muthukumar - tirupur,இந்தியா
01 பிப்,2013 - 09:39
 Muthukumar நல்ல ஒரு மனிதனை இறைவன் கை விட மாட்டான்.....
Sudha - Canada,கனடா
01 பிப்,2013 - 09:15
 Sudha Dear kamal, You have great talent.Why don't u take the movie in English also. Surely canadian and American understand what you are trying to say. Don't lose your heart.
vadivelan - maruthakkudippatti,இந்தியா
01 பிப்,2013 - 09:03
 vadivelan டியர் சார் In the inital stage itself, you should appoach the Chief Minister Ms. J Jayalalitha for this. Instead you did so many things. She should take care whole state. If anything happens to minorities. She is responsible. Kindly coperate with Mam. She is the best judge. Hence forth dont touch subjects either hindu, muslim or christian religions and God. I am also one of your fan. Regards
ராம.ராசு - கரூர்,இந்தியா
01 பிப்,2013 - 08:37
ராம.ராசு முதல்வர் சொல்வது "முஸ்லிம்அமைப்புகளின் தீவிர போராட்டத்திற்குப் பின்னரே தமிழகத்தின் சட்டம், ஒழுங்கைக் காக்கவே, படத்திற்கு அரசு தடை விதித்தது". கமல் சொல்வது "பிரச்னை மத ரீதியானது கிடையாது. அரசியல் ரீதியான பிரச்னை". இதில் வலிமையான அதிகாரம் முதல்வருக்கு மட்டுமே உள்ளது என்பதுதான் தீர்க்கமான ஒன்று. மற்றபடி பொதுமக்களுக்கு உண்மை எது என்பது நன்றாகவேத் தெரியும்.
karthick - udangudi,இந்தியா
01 பிப்,2013 - 08:18
 karthick இதுக்கு கமல் சார் தான் காரணம்
marikani - madurai,இந்தியா
01 பிப்,2013 - 08:06
 marikani super
காயத்ரி பாலாஜி - Chennai,இந்தியா
01 பிப்,2013 - 07:50
 காயத்ரி பாலாஜி ஒரு உண்மையான கலை திறனுக்கு இத்தனை கொடுமையா இந்த சுதந்திர நாட்டில்?
தப்பா - bangalore,இந்தியா
01 பிப்,2013 - 07:30
 தப்பா கமலஹாசா உன்னை அமெரிக்காவில் உள்ளே விடாமல் கரைச்சல் கொடுத்தார்கள் . முல்லா ஓமர் ஒசாமா என்ன பண்ணான் உன்னை. நீ உண்மையானவன் என்றால் அமெரிக்க ஒரு தீய சக்தி என்று படம் பண்ண வேண்டும்.. உன் படம் CIA பணத்தில் எடுத்த படமா. விஜய் டிவி முதாளிகள் அமெரிக்காவில் FOX டிவி ஒனர்கள் ,. விஜய் டிவி எப்படி நம்ம கேடி சகோதர்களை விட அதிக பணம் கொடுத்தது
சரவணன் கே - chennai ,இந்தியா
01 பிப்,2013 - 07:29
 சரவணன் கே இந்த படத்தை நான் நிச்சயமாக தேட்டர் சென்று பார்பேன்
பாலா - Dallas,யூ.எஸ்.ஏ
01 பிப்,2013 - 07:04
 பாலா தலைவா, நீ இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன் (இதை இப்பொழுது நினைக்கவில்லை, பல வருடங்களாக நினைத்து வருகிறேன்), இந்தியாவில் உனக்கு மரியாதை கிடைக்காது. ஹாலிவுட் படம் எடுக்க வாய்ப்பு என்று கேள்விப்பட்டதும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பிறந்த வீட்டை (இந்தியா) விட்டு புகுந்த வீட்டுற்கு போ (எந்த நாடு என்று நீ தான் முடிவு செய்ய வேண்டும்)
Uma Krishna - Tirunelveli ,இந்தியா
01 பிப்,2013 - 04:33
 Uma Krishna 65 வருஷ சுதந்திர நாட்டில், படித்தவனுக்கும், பாமரனுக்கும் cinema ஒரு வடிகாலாக இருந்தது என்றால், அது மிகையல்ல. அல்லது அக்கருத்தை, யாராவது மறுக்கத்தான் முடியுமா? இப்படி சொல்வதினால், நான் ஏதோ சினிமா சம்பந்தப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவள் என நினைக்க வேண்டாம். 3 தலைமுறையாக, வருசத்திற்கு இரண்டு படம் பார்க்க கூடிய, " ஆதி சங்கர நாராயணன்" என்ற என் தாத்தாவின் பெயரை, திரு. சுஜாதா அவர்கள், ஒரு படத்தில் ஹீரோவுக்கு பாதியாக வைத்தார் என்பதை தவிர, இன்றளவும் சினிமாவுடன், ஒரு சம்பந்தமும் இல்லாத, ஒரு குடும்பத்தை சேர்ந்தவள்தான் நான். ஒரு கடுமையான உழைப்பாளிக்கு, உண்மையான கலைங்கனுக்கு நேர்ந்தது மனதை வலிக்க செய்கிறது. வாழ்வின் அடிப்படை வசதிகள் இல்லாவிட்டாலும், அரை வயிறு, கால் வயிறு கஞ்சி குடித்தாலும், அதை எல்லாம் மறக்க செய்யும் சக்தி, கோடானு கோடி மக்களை உயிர்ப்புடனும், நம்பிக்கையுடனும் வாழ செய்யும் சக்தி சினிமாவிற்கு உண்டு. இனிமேல், நல்ல படைப்புகளை, பயம் இல்லாமல் நம் படைப்பாளிகள், நமக்கு தருவார்கள? விக்கிற விலைவாசியில், ஒரு படம் எடுப்பது என்பது, 10 பிரசவ வலியை ஒரு சேர அனுபவிப்பது போலத்தானே? உலக தரத்திற்கு படம் பண்ணுகிற தமிழனின் கெட்டிக்கார தனத்திற்கு போடப்படும், ஒரு முட்டு கட்டை அல்லவா? கேப்மாரி, மொள்ளமாரி, கொள்ளைமாரி....இதில் எது மாதிரியும் இல்லாமல், கனவிலும் கற்பனை பண்ண முடியாத உழைப்பையும், 40வருச உழைப்பின் பயன் முழுவதும் போட்டு, பலனை எதிர்ப்பார்த்தால், மனசாச்சி இல்லாமல் பேசுகிறேர்கள். எங்களை பத்தி கூடத்தான், படத்தில் joke வருகிறது. நாங்கள் அப்படியில்லை என்பதால், அதை பெரிதுபடுத்தவில்லை.
Rangiem N அண்ணாமலை - bangalore,இந்தியா
01 பிப்,2013 - 04:26
 Rangiem N அண்ணாமலை இது உங்களது தொழில் ரீதியான எதிரிகள் செய்த சதி என்று நினைக்கிறேன் .அரசியல் தாண்டிய சதி .உங்கள் விடா முயற்சி வெற்றியை கொடுக்கும் .நாங்கள் கதை,விமர்சனம் படிக்காமல் திரை அரங்குகளில் படம் பார்க்கும் ரசிகர்கள்.உங்கள் லாபம் உங்களுக்கு வரும் .எங்கள்(நமது) கடவுள் உள்ளார் .வெற்றி கிட்டும் .கமல் என்பதால் இவ்வளவு நடந்து உள்ளது.
aman - trichy,இந்தியா
01 பிப்,2013 - 04:16
 aman மரூத நாயகத்தை ஏன் கைவிட்டீர் .
Rss - Mumbai,இந்தியா
01 பிப்,2013 - 02:58
Rss தடைகளை தாண்டி சரித்திரம் படைப்பவன் என்று சொல்வாயே தலைவா ..! இந்த சின்ன பசங்கள பத்தி கவலை படாத ..
விருமாண்டி - மதுரை,இந்தியா
01 பிப்,2013 - 02:53
விருமாண்டி தலைவா நீ உலகநாயகன்..! ..நீ யாரிடமும் பேச்சு வார்த்தை நடத்த தேவை இல்லை ..இவர்களுக்கு உன்னுடன் பேச தகுதி இல்லை ...
அசோக் - Melbourne,ஆஸ்திரேலியா
01 பிப்,2013 - 02:00
 அசோக் டியர் கமல், இது உங்களுக்கு மட்டும் அல்ல, இது அனைவருக்கும் உள்ள பிரச்சினை, இதை மாற்ற முடியாது. நமது காரியம் நடக்க வேண்டும் என்றால் இது போன்றவர்களுக்கு சோப்பு போட்டுதான் ஆக வேண்டும். This is universal truth.
சபீர் அஹ்மத் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
01 பிப்,2013 - 01:28
 சபீர் அஹ்மத் சகோதரனே...கவலை வேண்டாம்...இந்நிலை மாறும்...உன் சகோதரன்..
christopher - sana,ஏமன்
01 பிப்,2013 - 00:10
 christopher எல்லாரும் நடிகிராக !
mari - covai  ( Posted via: Dinamalar Android App )
31 ஜன,2013 - 22:57
mari kamal anna dont feel unga nalla manasuku elama nalatha than nadakum
senthil - HARUR  ( Posted via: Dinamalar Android App )
31 ஜன,2013 - 22:56
senthil கமல் சார்க்கு எனது ஆதரவு
smshaja - Dubai  ( Posted via: Dinamalar Android App )
31 ஜன,2013 - 22:55
smshaja தமிழ் ஈழம் பற்றி படம் எடுத்து தமிழுக்கும் தமிழனுக்கும் பெருமை தந்தி்ருக்கலாம் அதை விட்டு அமெரிக்காவை பெருமை படுத்த போய் இசுலாமியர்களின் எதி்ரி ஆகிவிட்டீர்களே கமல்
selvarajan - Paris,பிரான்ஸ்
31 ஜன,2013 - 22:35
 selvarajan சினிமா என்பது கவலையை மறக்க பயன்படும் பொழுது போக்கு கலை. அதை நல்ல முறையில் பயன் படுத்தி நாட்டு மக்களுக்கு நல்ல கருத்தினை சொன்னவர் எம். ஜி. ஆர். அவருக்கு பிறகு சினிமா உலகம் தரம் தாழ்ந்து விட்டது. ஆபாசம், வன்முறைதான் இப்பொழுது இந்திய சினிமா என்ற நிலையில் அரசின் அடக்கு முறை தேவைதான். இனிமேல் இந்திய சினிமா திருந்த வாய்ப்புண்டு.
சுந்தர் - chennai,இந்தியா
31 ஜன,2013 - 22:23
 சுந்தர் வேடிக்கையை பார்த்தீங்களா.. ஆரம்பத்துல த்யேட்டர் காரங்களுக்கு படம் தரமாட்டேன்நு சொன்னவரு இப்போ படம் போடா மாட்டங்கல்லன்னு வெயிட் பண்றார்....வாழ்க்கை ஒரு சக்கரம் சார்......
சுந்தர் - chennai,இந்தியா
31 ஜன,2013 - 22:17
 சுந்தர் அறுபது கோடி நஷ்டமாம். சாதாரணமாக சொல்கிறார். கோடிக்கு மதிப்பில்லையா இல்ல...
bharathiraja - singapore,சிங்கப்பூர்
31 ஜன,2013 - 22:07
 bharathiraja விருமாண்டி பிரச்சனை தீர்வு காண அம்மாவை பார்த்திங்க இப்ப ஏன் பார்க்க போகாம கோர்டுக்கு போனிங்க உங்களவச்சு விஜயகாந்தும் கலைஞரும் அரசியல் பண்ண பார்க்குறாங்க 2நாள் முன்னாடி வரைக்கும் ஏதும் பேசவில்லை முஸ்லிம் நண்பர்கள் ஓட்டு கிடைக்காம போய்விடும் என்று பயந்து சும்மா இருந்து விட்டு இப்ப வாரி கட்டிக்கொண்டு வந்து விட்டார்கள் கவனமாக இருங்கள். ரஜினி சொன்ன மாதிரி லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட வருவிங்க வாழ்த்துக்கள்.
Jesse - Bangalore,இந்தியா
31 ஜன,2013 - 21:51
 Jesse டே balaji nee enna loosa?
murugan - nigeria.lagos,நைஜீரியா
31 ஜன,2013 - 21:37
 murugan உங்கள் படம் அஸ்கர் விருது வாங்குவது நிற்சயம் அப்போ அனிவருக்கும் தெரியும் கமல் பற்றி நன்றி
எ.ப.Shivakumar - Dubai UAE,ஐக்கிய அரபு நாடுகள்
31 ஜன,2013 - 21:31
 எ.ப.Shivakumar தயவு செய்து கவலை விடுங்கள்.நீங்கள் ஒரு கலை புலி.அப்படியே dhairiyama இருங்கள்.
கமல் rasigan - Paris,பிரான்ஸ்
31 ஜன,2013 - 20:38
 கமல் rasigan தலைவா இது உனக்கு ஏற்பட்ட அவமானம் இல்ல உலக தமிழர்கே ஏற்பட்ட அவமானம்..
saimurugan - mayiladuthurai,இந்தியா
31 ஜன,2013 - 20:37
 saimurugan அதிகாரம் தலைவிரிக்ரவரைகும் திறமைசாலிகள் அழிய வேண்டித்தான் ... தமிழகமே தவிக்கிறது .........
ashokkumar - salem,இந்தியா
31 ஜன,2013 - 20:36
 ashokkumar கேரளா மற்றும் அண்டை மாநிலங்களில் விஸ்வருபம் ஓடும் போது, தமிழ்நாடு மட்டும் , தடை செய்து உள்ளது என்னை போன்ற பொது மக்களுக்கு ஆச்சிரியமாக உள்ளது ..இந்த செயல் அரசுக்குத்தான்மிக மோசமான கெட்ட பெயரை உருவாக்கி உள்ளது .மாற்றம் வேண்டும் .
raja - tokyo,ஜப்பான்
31 ஜன,2013 - 20:15
 raja அவமானம்
siva - pondicherry,இந்தியா
31 ஜன,2013 - 20:02
 siva கமல் சார் . தமிழனாக நீங்கள் பிறந்ததற்கு நாங்கள் பெருமை படுகிறோம்.. என்றும் எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு..
baas - ambur  ( Posted via: Dinamalar Android App )
31 ஜன,2013 - 20:00
baas வருந்துகிறேன்
vasahar - theni,இந்தியா
31 ஜன,2013 - 19:42
 vasahar விஸ்வரூபம் படம் கற்பனைக் கதை தான் உண்மை கதை அல்ல அதனால் எல்லோரும் படத்தை பார்த்து பொழுது போக்கான படம் என்று மட்டுமே மனிதில் நிலைநாட்டுங்கள் ... இப்படிக்கு ந கமலின் ரசிகனும் அல்ல முஸ்லிமும் அல்ல ஒன்லி இந்தியன்
nayagam - nellai,இந்தியா
31 ஜன,2013 - 19:42
 nayagam தலைவரே கவலை வேண்டாம் இந்த படம் வெளிவந்து நிச்சயமாக ஆஸ்கார் விருது கண்டிப்பாக கிடைக்கும் .......அப்போ தெரியும் கமல் நா யாருன்னு...............................
balaji - Chennai,இந்தியா
31 ஜன,2013 - 19:10
 balaji டியர் சார் In the inital stage itself, you should appoach the Chief Minister Ms. J Jayalalitha for this. Instead you did so many things. She should take care whole state. If anything happens to minorities. She is responsible. Kindly coperate with Mam. She is the best judge. Hence forth dont touch subjects either hindu, muslim or christian religions and God. I am also one of your fan. Regards G Balaji
oli - chennai  ( Posted via: Dinamalar Android App )
31 ஜன,2013 - 18:55
oli அந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mapla Singam
  Tamil New Film Maari
  • மாரி
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : காஜல் அகர்வால்
  • இயக்குனர் :பாலாஜி மோகன்
  Tamil New Film Karai Oram
  • கரை ஓரம்
  • நடிகர் : கணேஷ் பிரசாத்
  • நடிகை : நிகிஷா படேல்
  • இயக்குனர் :ஜே.கே.
  Tamil New Film Bahubali
  • பாகுபலி
  • நடிகர் : பிரபாஸ் ,701
  • நடிகை : அனுஷ்கா ,12
  • இயக்குனர் :எஸ்.எஸ்.ராஜமவுலி

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in