Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் சினிமாவை ஹாலிவுட்டுக்கு கொண்டு செல்ல முத்தக்காட்சியில் நடிக்கிறேன்: ஆர்யா பரபரப்பு பேச்சு

31 ஜன, 2013 - 16:34 IST
எழுத்தின் அளவு:

ஆர்யா என்றாலே "பார்யா இவரை" என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு ப்ளேபாய் என்பது சினிமாவில் எல்லோருக்கும் தெரியும். நயன்தாரா,  ஹன்சிகா, அனுஷ்கா, அஞ்சலி, த்ரிஷா, அமலா பால் எல்லோருமே ஆர்யா வீட்டில் பிரியாணி சாப்பிட்டவர்கள். வேட்டை படத்தில் அமலாபாலுக்கு முத்தம் கொடுத்து பரபரப்பு ஏற்படுத்தினார். இப்போது சேட்டை படத்தில் அஞ்சலிக்கு முத்தம் கொடுத்து பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறார்.

சேட்டை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விழா தொகுப்பாளினி ரம்யா பேச வந்தவர்களிடம் ஒரு கேள்வி கேட்டு பதில் சொல்ல வைத்தார். அவர் ஆர்யாவிடம் அவர் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

* நீங்கள் எந்த நடிகையுடன் நடித்தாலும் அவர்களுடன் லிப்லாக் முத்தக் காட்சி வையுங்கள் என்று வற்புறுத்துறீங்களாமே. ஏன் முத்தக் காட்சியில் ஆர்வம் காட்டுறீங்க?

தமிழ் சினிமாவை அடுத்த தளத்துக்கு கொண்டு போறதுக்குத்தான். ஹாலிவுட்டுக்கு தமிழ் சினிமா போக வேண்டாமா? கமல் சார் மாதிரி நம்மால உருண்டு பிரண்டு நடிக்க முடியாது. நமக்கு தெரிஞ்சதெல்லாம் கிஸ்தான். அதனாலதான் ஹாலிவுட் ரேன்ஞ்சுக்கு முத்தக் காட்சியில நடிக்கிறேன்.

* உங்களுக்கு கேர்ள் பிரண்டை விட பாய்பிரண்ட்தான் அதிகமாமே?

கேர்ள் பிரண்ட்தான் அதிகம். அவுங்க வெளியில சொல்லிக்றதில்ல. பசங்க சொல்லிடுறாங்க.

* உங்களைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகிறதே?

கிசுகிசுக்களை நான் எழுதுறதில்லையே...

* நிஜ வாழ்க்கையில உங்க சேட்டை பற்றி சொல்லுங்கள்?

அது வெளியில சொல்லிக்கிற மாதிரி இல்லை. சொன்னா என்னை தப்பா நினைப்பீங்க. அதனால அதுக்கு கட் கொடுத்துடுறேன்.

திரைக்கதை ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும், தமிழ் சினிமாவை ஹாலிவுட் ரேஞ்ச்க்கு நமது திரையுலகினர் உயர்த்த போராடி, அதில் பாதி வெற்றியும் பெற்றுவிட்டனர். ஆனால் ஆர்யாவோ முத்தக்காட்சி மூலம் தமிழ் சினிமாவை ஹாலிவுட்டுக்கு கொண்டு செல்வேன் என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Venkay - Cbnbj  ( Posted via: Dinamalar Android App )
01 பிப், 2013 - 13:43 Report Abuse
Venkay Ivana yenna panlam
Rate this:
selvarajan - Paris,பிரான்ஸ்
31 ஜன, 2013 - 22:54 Report Abuse
 selvarajan இந்த மாதிரி எல்லாம் பேசினவருதான் இப்பொழுது மாட்டிகொண்டு முழிக்கிறார்.
Rate this:
vishal - chennai  ( Posted via: Dinamalar Windows App )
31 ஜன, 2013 - 21:55 Report Abuse
vishal machi enjoy....
Rate this:
அரசன் - madurai  ( Posted via: Dinamalar Android App )
31 ஜன, 2013 - 20:05 Report Abuse
அரசன் யப்பா உங்களை போன்ற வெத்து வேட்டு காமெடியன்கள் இந்த மாதி்ரி பேசுவதால்தான் நல்ல கலைஞனுக்கும் படைப்பாளிக்கும் மரியாதையே காமெடியாகி விட்டுது..கமல் முத்த காட்சியை மறுக்க முடியாது..ஆனால் உலக தரத்துக்கு என்று நீர் சொல்லும் காமெடியை ரசிக்க முடியவில்லை..விஸ்வரூபம் மூலம் இனிமேலாவது தரமான படம் வரும் என்றால், ஷகிலா பட நாயகன் மாதி்ரி பேசி மறுபடியும் 2 சண்டை 5 பாடல் உப்பில்லாத கதை என்று கொண்டு செல்வதை நிறுத்துங்கள்..நீங்கள் அழகான hero என்பதி்ல் மறுப்பில்லை..வாழ்துகள்.
Rate this:
vino - chennia  ( Posted via: Dinamalar Android App )
31 ஜன, 2013 - 18:18 Report Abuse
vino வேர வழியே கிடைகலையாடா உனக்கு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in