10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? |
படு கிளாமரிலும், திகிலிலும் கலக்கும் இந்திப் படம் மர்டர். 2004ம் ஆண்டு வெளிவந்தது. அதில் இம்ரான் ஹாஷ்மியும், மல்லிகா ஷெராவத்தும் நடித்த படுக்கையறை காட்சிகள் பிரசித்தம். அடுத்த பாகம் 2011ல் வெளிவந்தது. இதிலும் இம்ரான் ஹாஷ்மி, ஜாக்லின் பெர்ணாண்டஸ் இணைந்து நடித்த காட்சிகள் பிரசித்தம். இப்போது மர்டர்-3 வெளியாகிறது. இந்த முறை ஹீரோ இம்ரான் ஹாஷ்மி இல்லை. அவருக்கு பதிலாக ரன்தீப் கூட்டா. அவருக்கு ஜோடி அதீதிராவ். இந்த பாகத்தையும் மகேஷ்பட்தான் இயக்கி உள்ளார். இதிலும் சூடான படுக்கையறை காட்சியும், முத்தக் காட்சியும் உள்ளது. யூ டியூப்பில் டிரைய்லரே பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது.
கதைப்படி ஹீரோ விக்ரம் ஒரு போட்டோகிராபர். அவன் ஒரு ஓட்டலில் தங்கும்போது அங்கு பணிபுரியம் அதீதியுடன் காதல். அவளை அழைத்துக் கொண்டு தன் உல்லாச பங்களாவுக்கு வருகிறான். உல்லாசமாக இருக்கிறான். அப்போது அதீதிக்கு தெரியவருகிறது, அவள் மட்டுமே அங்கு இல்லை வேறு சில பெண்களும் இருக்கிறார்கள். விக்ரம் யார்? அவன் என்ன செய்கிறான் என்பது திகில் சமாச்சாரங்கள். பிப்ரவரி 15ல் வெளிவருகிறது. தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் ராமநாராயணனின் தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.