ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்தியில் வித்யாபாலன் நடித்த கஹானி படத்தின் தமிழ் ரீ-மேக்கில் நயன்தாரா கமிட்டாகியுள்ளார். இந்த வேடத்தில் நடிக்க ஆரம்பத்தில் அனுஷ்கா, ஹன்சிகா உள்ளிட்ட சில நடிகைகள் தீவிர முயற்சி எடுத்தனர். ஆனால், சமீபகாலமாக நயன்தாரா நடிப்பில் சிறந்து விளங்குவதால், அவருக்கு அந்த வேடம் பொருத்தமாக இருக்கும். அவரால்தான் வித்யாபாலன் நடித்த கதாபாத்திரத்தை நிறைவு செய்ய முடியும் என்று மற்ற நடிகைகளை ஓரங்கட்டிவிட்டு நயனை கமிட் பண்ணியிருக்கிறார்கள்.
இந்த நிலையில், வித்யாபாலன் நடித்த வேடத்தில் நடிப்பது பற்றி கூறும் நயன்தாரா, அவர் நடித்த வேடத்தில் நடிப்பது ரொம்ப சவாலான விசயம். அதனால் நல்லமுறையில் ஹோம்ஒர்க் செய்து அந்த வேடத்தில் நடிக்கப்போகிறேன் என்றும் சொல்லும் நயன்தாரா, சிலர் எதிர்காலத்தில் வித்யாபாலன் நடிப்பது போல் முத்தக்காட்சி, குளியல் காட்சி போன்றும் நடிப்பீர்களா? என்று கேட்கிறார்கள். என்னைப்பொறுத்தவரை கிளாமராக நடிக்க வேண்டும் என்பதில் தற்போது உடன்பாடில்லை. இருப்பினும், அந்த கதைக்கு அப்படி நடித்தால்தான் சரியாக இருக்கும் என்று இயக்குனர்கள் எனக்கு தெளிவுபடுத்தும்போது தவிர்க்க மாட்டேன். வித்யாபாலன்கூட அப்படி எல்லா படத்திலும் நடித்திருக்க மாட்டார். அவசியப்பட்ட படங்களில்தான் நடித்திருப்பார். அதனால் அவர் போன்று தேவைப்பட்டால் நானும் நடிப்பேன். அதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்கிறார் நயன்தாரா.