சித்தார்த்துக்காக மெனக்கெட்ட சந்தானம்! | கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் கெளதம்! | மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்! | நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்! | சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் |
டி.வி நடிகர் கணேஷ்பாபு இயக்கி உள்ள படம் யமுனா. பாலுமகேந்திரா நடிப்பு பள்ளி மாணவர் சத்யா. ஸ்ரீரம்யா நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் எடிட்டராக பி.லெனின் வேலை செய்து வருகிறார். படப்பிடிப்பு முடிந்து எடிட் செய்யும்போது படத்தைப் பார்த்த லெனின் படத்தின் கதையில் சில மாற்றங்கள் வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இதை முதலில் மறுத்த இயக்குனர் கணேஷ்பாபு பிறகு ஒத்துக்கொண்டு மறுபடப்பிடிப்பு நடத்தி கதையில் மாற்றம் செய்துள்ளார். கதாநாயகியின் தந்தையாக ஒரு முக்கிய நடிகர் நடித்துள்ளார். கதையில் அவர் கடைசி வரை உயிரோடு இருப்பாராம். ஆனால் எடிட்டர் லெனின் அந்த கேரக்டரை இடையிலேயே கொன்று விடுமாறும், அப்படிச் செய்தால்தான் படத்தின் விறுவிறுப்பு கூடும் என்று சொன்னாராம். அதைத்தொடர்ந்து அந்த கேரக்டரை கொல்லும் காட்சியை படமாக்கி படத்தில் இணைத்துள்ளார்களாம்.