ராம்கோபால் வர்மாவின் புதிய கண்டுபிடிப்பு | விரைவில்..."துர்யோதனா ஆபரேஷன்-2 | மீண்டும் பிசியான சினேகா | த்ரிஷாவுக்கு டாட்டா அமலா பாலுக்கு ஓ.கே., | சிம்பு எழுதி பாடிய குட்டிபயலே பாடல் | 1,001வது படத்தில் வினுசக்கரவர்த்தி | திருமணம் என்னும் அன்பு சிறைக்குள் என்னை அடைக்க விரும்பவில்லை:காஜல் அகர்வால் | ஹாலிவுட்டில் படம் இயக்குகிறார் பி.வாசு!! | நான் பந்தா பண்ணும் நடிகை இல்லை! -மரியான் பார்வதி | எள் என்றால் எண்ணெய்யாக வந்து நிற்பார் ஹன்சிகா! டைரக்டர் சுந்தர்.சி புகழாரம் |
இந்நிலையில் ரசிகர்கள் முன்னிலையில் பேசிய கமல், ரசிகர்கள் அனைவரும் அமைதியாக இருக்குமாறும், யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டு கொண்டார். மேலும் இந்தி விஸ்வரூபத்திற்காக தான் மும்பை செல்ல இருப்பதாகவும், அங்கு படத்தை ரிலீஸ் செய்துவிட்டு வெற்றியோடு திரும்புவேன் என்று கூறினார்.
பிப்ரவரி 1ம் தேதி (நாளை) விஸ்வரூபம் படம் இந்தியில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்காக கமல் சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை சென்றார். அங்கு படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலையை முடித்துவிட்டு திங்கள் அன்று வருவார் என தெரிகிறது. இதற்கிடையே விஸ்வரூபம் படத்தை 2ம் தேதி டி.டி.எச்.இல் வெளியிடுவதாக கமல் கூறியிருந்தார். ஆனால் இப்போது நிலவும் சூழலால் அது சாத்தியமா என்று தெரியவில்லை. மேலும் ஏற்கனவே டி.டி.எச். பிரச்னைக்கு இந்தியில் எதிர்ப்பு கிளம்பியது மற்றும் தற்போது தமிழகத்தில் நிலவும் சூழல் போன்றவற்றால் விஸ்வரூபம் படம் அங்கும் சுமூகமான முறையில் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் சுத்தமாக இப்படம் ரிலீஸ் ஆகவில்லை. தென்னிந்தியாவின் பிறமாநிலங்களில் பதட்டமான சூழலில் ரிலீஸ் ஆவதும், பாதியில் நிறுத்தப்படுவதுமாக இருக்கிறது. இந்நிலையில் இப்போது இந்தி ரிலீஸ்க்காக மும்பை சென்றுள்ளார். அங்காவது அவருக்கு வெற்றி கிடைக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்...!