இயக்குனர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் ஆர்.வி.உதயகுமார்! | முதல்வருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்குமார்-சைந்தவி! | பக்திமார்க்கத்தில் இறங்கினார் சிம்பு...! | மீண்டும் ஹீரோவாகிறார் கரு.பழனியப்பன்! | சில்க் ஸ்மிதாவே ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு சாதிக்கப்போகிறேன்! - சனாகான் | விஜய் பிறந்த நாளில் தலைவா ஆடியோ ரிலீஸ்? | வெளிநாட்டு படக்குழுவுக்கு சிரஞ்சீவி அழைப்பு! | எனக்கு மாடர்ன் டிரெஸ்னா உசுரு...! உருகுகிறார், "பூ பார்வதி | சினிமாவாகிறது கிரிக்கெட் சூதாட்டம்! | உலக பொருளாதார அமைப்பில் பேசுகிறார் குத்து ரம்யா! |
"தவமாய் தவமிருந்து படத்தின் ஹீரோயின் பத்மப்ரியா, சில ஆண்டுகளுக்கு முன்வரை, மலையாளத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். மலையாளம் தவிர, தெலுங்கு, தமிழ், பெங்காலி மொழி படங்களிலும் நடித்து, இந்திய அளவில் பேசப்படும் நடிகையாக திகழ்ந்தார். ஆனால், கடந்தாண்டு, இவருக்கு ராசியில்லாத ஆண்டாக ஆகி விட்டது.கடந்தாண்டு, இவர் நடித்த படங்கள், பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. "பேச்சிலர் பார்ட்டி என்ற படத்தில், ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதும், மலையாள திரையுலகில், இவருக்கு பின்னடைவை ஏற்படுத்தி விட்டது.ஆனால், இந்தாண்டு, மிகவும் ராசியான ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார், பத்மப்ரியா. அவரது நம்பிக்கைக்கு காரணம், "அஞ்சு சுந்தரிகள், லேடீஸ் அண்ட்ஜென்டில்மேன் என்ற படங்களில் நடித்து வருகிறார். "லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் படத்தில், மோகன் லால், மீரா ஜாஸ்மின் <ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தில், எனக்கு வித்தியாசமான கேரக்டர். இந்தாண்டில், கண்டிப்பாக, ஏற்கனவே தவறவிட்ட வாய்ப்புகளை, பிடிப்பேன் என்கிறாராம், பத்மப்ரியா.