பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ், தெலுங்கு திரையுலகின், முன்னணி நடிகைகள் பலர், சமீபகாலமாக, பாலிவுட்டுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஷாருக் கான், தீபிகா படுகோனே நடிக்கும், "சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை, ரோகித் ஷெட்டி இயக்கி வருகிறார். இந்த படத்தில், ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாடும்படி, நயன்தாராவை, இயக்குனர் அணுகியுள்ளார்.ஆனால், நயன்தாரா அதில் நடிக்க மறுத்து விட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது. "தேடிவந்த வாய்ப்பை, மறுத்து விட்டதேன் என, நயனிடம் கேட்டபோது," முதன் முதலில், பாலிவுட்டில் அறிமுகமாகும்போது, குத்துப் பாடல் மூலமாக அறிமுகமானால், நன்றாகவா இருக்கும்? நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்தால் தானே, பெயர் கிடைக்கும் என, பதில் வந்ததாம்.