ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்கு திரையுலகின் இளம் தலைமுறை நடிகர், மகேஷ் பாபு நடித்த, "தொக்குடு, பிசினஸ்மேன், சீதம்மா ஆகிய படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று, ஹாட்ரிக் அடித்துள்ளன. இந்த மகிழ்ச்சியோடு, "ஆகடு என்ற படத்தில், நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார், மகேஷ் பாபு. இதில், இவருக்கு ஜோடியாக, பாலிவுட் சாக்லேட், சோனம் கபூர் நடிப்பதாக, முதலில் தகவல்கள் வெளியாகின.சோனம் கபூர், பாலிவுட் மாஜி ஹீரோ, அனில் கபூரின் செல்ல மகள். "ஆயிஷா, டில்லி 6 <உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், தற்போது தனுஷ் ஜோடியாக, ஒரு இந்தி படத்தில் நடித்து வருகிறார். சோனாக்ஷி சின்கா, பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள், தெலுங்கில் கால் பதித்துள்ளதால், அவர்களை போலவே, சோனம் கபூரும், தெலுங்கில் நுழைய திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.ஆனால், இந்த தகவலை மறுத்துள்ளார், சோனம். "தெலுங்கில், இப்போதைக்கு நடிக்கும் எண்ணம் எதுவும் இல்லை. சரியான நேரமும், நல்ல கதையம்சமும் கொண்ட படம் கிடைக்கும்போது, மற்ற மொழிகளில் நடிப்பேன் என,கூறியுள்ளாராம், சோனம் கபூர்.