Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொறுமையாக இருங்கள் கமலுக்கு ரஜினி வேண்டுகோள்!!

30 ஜன,2013 - 17:44 IST
எழுத்தின் அளவு:

 விஸ்வரூபம் படத்தால் கமலுக்கு ஏற்பட்டு இருக்கும் இக்கட்டான நிலையை பார்த்து ‌போனில் கமலை தொடர்பு கொண்ட ரஜினி, அவரை பொறுமையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். கமலின் விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது, அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டை நாடினார் கமல். சென்னை ஐகோர்ட் தனி நீதிபதியும் தடையை நீக்கி உத்தரவிட்டது. ஆனால் இதனை ‌எதிர்த்து மீண்டும் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் விஸ்வரூபம் படத்திற்கு மீண்டும் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனிடையே காலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கமல், தமிழகத்தை விட்டே வெளியேறுவேன் என்று உருக்கமாக பேட்டியளித்தார். கமலின் இந்தபேட்டியை அடுத்து திரையுலகினர் பலரும் கமலை தொடர்ப்பு கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விஸ்வரூபம் படத்திற்கு முதலில் பிரச்னை எழுந்தபோது திரையுலகில் இருந்து முதல் ஆளாக குரல் கொடுத்தவர் அவரது திரையுலகின் நல்ல நண்பர் ரஜினி. கமலின் பேட்டியை பார்த்து உடனே கமலை தொடர்பு கொண்டு தான் வருவதாக கூறினார். ஆனால் கமல் தான் தற்போது வேண்டாம் என்று கூறியுள்ளார். இருந்தும் போனில் பேசிய ரஜினி அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். நிச்சயம் நல்ல முடிவு வரும். அதுவரை பொறுமையாக இருங்கள் என்று கேட்டு கொண்டுள்ளார்.

இதற்கிடையே திரையுலகை சேர்ந்த பலரும் கமலின் வீட்டை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். ஒவ்‌வொருவரும் தங்களது ஆதரவை கமலுக்கு தெரிவித்து வருகின்றனர். மேலும் ஏராளமான ரசிகர்களும் கமல் வீட்டு முன்பு திரண்டுள்ளனர். இதனால் கமல் வீட்டு முன்பு ஒரே பரபரப்பாக காணப்படுகிறது.

Advertisement
ஜீவா-ஜெயம்ரவி நடிக்கும் ஜீவா-ஜெயம்ரவி நடிக்கும் "தூக்கு ... பாடல்களில் உயிர் இருக்க வேண்டும் பாடல்களில் உயிர் இருக்க வேண்டும்

வாசகர் கருத்து

bala - bangalore,இந்தியா
06 மே,2013 - 19:00
bala நண்பன்டா
sindhu - tup,இந்தியா
31 ஜன,2013 - 17:01
 sindhu கமல்-உண்மையான உழைப்புகேத்த உயர்வு நிச்சயமாக கிடைக்கும்.சோதனையே சாதனையா மாறும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கு .....all the best
மூர்த்தி - chennai,இந்தியா
31 ஜன,2013 - 11:47
 மூர்த்தி சுதர்சன் உங்களுக்கு இருக்குது ஆப்பு
முபாரக் - Krishnagiri,இந்தியா
31 ஜன,2013 - 10:45
 முபாரக் இப்போ பிரச்சினை இஸ்லாமியர்களுக்கு இல்லை அரசுக்கு தான் என்று தெரிகிறது
சுதர்சன் - Switzerland,சுவிட்சர்லாந்து
31 ஜன,2013 - 01:10
 சுதர்சன் டியர் ரஜினி இன்னும் கொஞ்சம் பொறுமையாக நீங்கள் இருக்கவும், உங்கள் கோச்சடயானுக்கும் இருக்கு ஆப்பு
mk - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
30 ஜன,2013 - 23:46
mk கமல் அண்ணா மாதி்ரி ஓரு கலைஞன தமிழகம் இழக்க விரும்பல நாங்க உங்களுக்கு பக்க பலமா இருப்போம்
kannan - villupuram,இந்தியா
30 ஜன,2013 - 23:43
 kannan பிரச்சினை அரசியலாக்க பட்டுள்ளது
S S Hussain - Doha,கத்தார்
30 ஜன,2013 - 23:29
 S S Hussain மரியாதைக்குரிய கமல் அவர்ஹட்க்கு கவலை வேண்டாம் நடப்பது எல்லாம் நன்மைக்கே
B.Naina mohamed - chennai  ( Posted via: Dinamalar Windows App )
30 ஜன,2013 - 23:14
B.Naina mohamed Kamalhasanuku Rajini tharama yar tharuva
mk - anna market covai  ( Posted via: Dinamalar Android App )
30 ஜன,2013 - 23:05
mk கமல் அண்ணா உங்கள் பக்கம் நாங்க இருக்கோம் வெற்றி உங்கள் பக்கம்
பாலு.a - vellore,இந்தியா
30 ஜன,2013 - 22:59
 பாலு.a think is very bad
உண்மைவிளங்கி - Madurai,இந்தியா
30 ஜன,2013 - 22:59
 உண்மைவிளங்கி சிவாஜி படத்துல ரஜினி டி கடைல ஒரு ரூபாய் சுண்டி வடுவார்... இனி கமல் எடுக்க வேண்டியது - சிங்க பாதை - பொருத்தது போதும்
sounderrajan - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
30 ஜன,2013 - 22:15
sounderrajan வந்துட்டாரய்யா கைப்புள்ள
Gopj - Chennai  ( Posted via: Dinamalar Android App )
30 ஜன,2013 - 21:18
Gopj Dnt wry jjj
aru - chennai  ( Posted via: Dinamalar Blackberry App )
30 ஜன,2013 - 19:45
aru ellorum mudalil thuungi kondu irunthaargala, Ellorukkum ullukkul konjam santhosam thaan,ithuthaan unmai,
sathish. - salem  ( Posted via: Dinamalar Android App )
30 ஜன,2013 - 18:15
sathish. உயிர் நண்பன் ட
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mapla Singam
  Tamil New Film Maari
  • மாரி
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : காஜல் அகர்வால்
  • இயக்குனர் :பாலாஜி மோகன்
  Tamil New Film Karai Oram
  • கரை ஓரம்
  • நடிகர் : கணேஷ் பிரசாத்
  • நடிகை : நிகிஷா படேல்
  • இயக்குனர் :ஜே.கே.
  Tamil New Film Bahubali
  • பாகுபலி
  • நடிகர் : பிரபாஸ் ,701
  • நடிகை : அனுஷ்கா ,12
  • இயக்குனர் :எஸ்.எஸ்.ராஜமவுலி

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in