Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

சுப்ரீம் கோர்ட்டை நாட கமல் முடிவு

Kamal decides to appeal in supreme courtவிஸ்வரூபம் படத்திற்கு சென்னை ஐகோர்ட் மீண்டும் தடை விதித்தைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு செய்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். கமலின் பிரம்மாண்டத்தில் உருவாகியுள்ள படம் விஸ்வரூபம். இப்படத்தில் முஸ்லிம்களை அவமதிப்பது போன்ற காட்சிகள் இருப்பதாக முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததைத்தொடர்ந்து இப்படத்தை தடை செய்தது தமிழக அரசு. இதனை எதிர்த்து கமல் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்கிறதா என்று கடந்த 26ம் தேதி பார்த்து, பின்னர் நேற்று படத்துக்கான தடையை நீக்கி உத்தரவிட்டார். ஆனால் இதனை எதிர்த்து தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. வழக்கை நீதிகள் எலிபி தர்மாராவ் மற்றும் அருணா ஜெகதீசன் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் படத்‌திற்கு மீண்டும் தடைவிதித்து இன்று (30.01.13)உத்தரவிட்டனர். இதனால் இப்படம் ரிலீஸ் ஆவதில்லை தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

இதற்கிடையே கமல் காலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து இப்படம் ரிலீஸ் ஆகவில்லை என்றால் தான் இருக்கும் வீடு தனக்கு சொந்தமாக இருக்காது என்றும், தன்னை தமிழகத்தை விட்டே வெளியேற்றும் முயற்சிகள் நடப்பதாகவும், தீர்ப்பு சாதகமாக இல்லையென்றால் தான் மதச்சார்ப்பற்ற வேறு ஒரு மாநிலத்திற்கோ அல்லது வேறுநாட்டிற்கோ போக நேரிடும் என்று உருக்கமா பேட்டியளித்தார். மேலும் பிற்பகலில் சில முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சர்ச்சைக்குரிய சில காட்சிகளை நீக்கவும் சம்மதம் தெரிவித்தார்.

இருந்தும் தற்போது அவருக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை, இதனால் இனி சென்னை ஐகோர்ட்டை நம்பி பிரயோஜனம் இல்லை என்று முடிவெடுத்து சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு செய்துள்ளார்.

Tags »
Kamal, decides, appeal, supreme court, விஸ்வரூபம் விவகாரம், சுப்ரீம் கோர்ட், கமல் முடிவு,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (7)

கண்ணன் - Chennai,இந்தியா
2013-01-31 13:05:48 Report Abuse
 கண்ணன் தனக்கு தலைகனம் இல்லை என்று கமல் சொல்லியிருப்பது விந்தை. உலகமே அறியும் அவரின் திமிர் பற்றி.....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
indian - chennai  ( Posted via: Dinamalar Android App )
2013-01-30 22:42:37 Report Abuse
indian கவனள வேண்டாம் அல்லா உங்கள் பக்கம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ram - dakar,செனகல்
2013-01-30 18:21:28 Report Abuse
 ram ஜாதி, மத மோதல்களை உருவாக்கும் தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ஒரு கலைஞனை கஷ்ட படுத்தும், சதி செய்யும் முதல்வர், மக்கள் மீது கவனம் இல்லை என்பதுக்கு இந்த விஸ்வரூபமே ஒரு சான்று.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
பிரபாகரன் - Dubai,இந்தியா
2013-01-30 18:12:28 Report Abuse
 பிரபாகரன் தமிழ் நாட்டில் தலிபான் ஆட்சி !
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மொக்கையன் - chennai,இந்தியா
2013-01-30 17:53:29 Report Abuse
 மொக்கையன் கமல் மாதிரி ஒரு புகழ் பெற்ற மனிதனையே இப்படி அலை கழிக்கிறார்களே .. இந்த நீதி , நியாயம் போன்றவற்றை ஒரு சாதாரண மனிதன் நாடினால் என்ன கதி என்று கொஞ்சம் யோசிச்சி பாருங்க ....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

தொடர்புடைய படங்கள்

 

தொடர்புடைய வீடியோ

Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in