முன்னணி பட நிறுவனங்களுக்கே கால்சீட் தரப்படும்! சிவகார்த்திகேயன் அதிரடி | மீண்டும் தமிழுக்கு வருகிறார் எங்கேயும் எப்போதும் அனன்யா | பிரிந்திருந்த ப்ரியா ஆனந்த் - சிவகார்த்திகேயனை சேர்த்த கேள்வி | நித்யா மேனனின் வருத்தம்...!! | கேன்ஸ் திரைப்பட விழாவில் துப்பாக்கி சூடு : நடிகர், நடிகையர் அலறியடித்து ஓட்டம் | ஜப்பானின் டோக்கியோவில் கோச்சடையான் இசை வெளியீடு! | சினிமாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்- மாஜி நடிகை ராதா | விஜய்யுடன் டூயட் பாடுவது கனவாகி விட்டது- அருந்ததி புலம்பல் | ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக ரத்தம் சிந்திய வழக்கு எண் ஸ்ரீ! | சிம்புவுக்காக கோவா செல்லும் படக்குழு! |
பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு தயாரிக்கும் தெலுங்கு படம் "கொண்டேலு கோதாவரி". தமிழில் "மறந்தேன் மன்னித்தேன்" என்ற பெயரில் தயாராகிறது. ஆதி, டாப்ஸியுடன் லட்சுமி மஞ்சும் நடிக்கிறார். 1986ம் ஆண்டு ஆந்திராவில் உள்ள கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இந்த பின்னணியில் படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது. குமார் நாகேந்திரா இயக்குகிறார். பிப்ரவரி மாதம் படம் வெளிவர இருக்கிறது. தெலுங்கு படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். படத்தில் இடம்பெற்றுள்ள ஆதி டாப்ஸியின் படுக்கை அறை காட்சியின் நீளத்தை குறைக்க சொன்னதோடு, அதில் இடம் பெற்றிருந்த உதட்டுடன் உதடு பதிக்கும் குளோஸ்-அப் முத்தக்காட்சியையும் நீக்கச் சொல்லிவிட்டனர். தமிழில் இன்னும் தணிக்கை செய்யப்பட வில்லை. தமிழ்நாட்டு சென்சார் அனுமதிப்பார்களா? அவர்களும் தடை விதிப்பார்களா என்று தெரியவில்லை.