Advertisement

சிறப்புச்செய்திகள்

விஸ்வரூபம் படத்திற்கு மீண்டும் தடை! சென்னை ஐகோர்ட் உத்தரவு

30 ஜன, 2013 - 15:30 IST
எழுத்தின் அளவு:

 விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கத்தை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்த மனு தொடர்பான விசாரணையில் விஸ்வரூபம் படத்திற்கு மீண்டும் தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. விஸ்வரூபம் பட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இப்படத்‌திற்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை ஐகோர்ட் நீதிபதி வெங்கட்ராமன் நேற்று நீக்கி உத்தரவிட்டார். ஆனால் விஸ்வரூபம் படத்திற்கு தடை நீக்கப்பட்டதை எதிர்த்து இந்த உத்தரவை இன்று காலை வரை நிறுத்தி வைக்க வேண்டும் என, கூடுதல் அட்வகேட்-ஜெனரல் அரவிந்த் பாண்டியன் கூறினார். ஆனால், அதை நீதிபதி எற்கவில்லை.

இதனையடுத்து இன்று இன்று காலை தமிழக அரசு தலைமை வக்கீல் நவநீத கிருஷ்ணன் படத்தை தடை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு தொடர்பான மனுவை தாக்கல் செய்தார். மேலும் வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்று வக்கீல் கேட்டு கொண்டார். ஆனால் நீதிபதி மறுத்துவிட்டார். இதனையடுத்து இந்தவழக்கு விசாரணை, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி பொறுப்பு எலிப் தர்மாராவ் மற்றும், அருணா ஜெகதீசனும் ஆகியோர் முன்னிலையில் வந்தது. வழக்கு விசாரணை மதியம் 2.30 மணிக்கு மேல் வந்தது.

அப்போது விஸ்வரூபம் படத்தை திரையிட்டால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும். ஏற்கனவே படம் ரிலீசாக வேண்டிய 540 தியேட்டர்களில் ஒருபதட்டமான சூழல் நிலவி வருகிறது எனவே படத்தை தடை செய்ய வேண்டும் ‌என்று வக்கீல் நவநீத கிருஷ்ணன் வாதிட்டார்.

கமல் தரப்பு வக்கீல் வாதிடும்போது,  வேண்டும் என்றே விஸ்வரூபம் படத்திற்கு எதிராக வன்முறை தூண்டப்படுகிறது. எனவே தடையை நிரந்தரமாக ரத்து செய்து தகுந்த பாதுகாப்புடன் படத்தை திரையிட உத்தர விட வேண்டும் என்று வாதாடினார்.

இருதரப்பு வாதத்தையும் ஏற்ற நீதிபதிகள் எலிப் தர்மாராவ் மற்றும், அருணா ஜெகதீசன் ஆகியோர் படத்தை மீண்டும் தடை செய்து உத்தரவு பிறப்பித்தனர். மேலும் இதுதொடர்பாக தமிழக அரசு உரிய விளக்கத்தை திங்கட்கிழமைக்குள் வழங்கும்படியும், அடுத்தகட்ட விசாரணையை பிப்-6ம் தேதிக்கும் தள்ளி வைத்து உத்தரவிட்டனர். கோர்ட்டின் இந்த உத்தரவால் விஸ்வரூபம் படம் இப்போதைக்கு ரிலீஸ் ஆகப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (21) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (21)

வா. ஸ்ரீனிவாசன் - CHENNAI,இந்தியா
31 ஜன, 2013 - 10:53 Report Abuse
 வா. ஸ்ரீனிவாசன் நான் சர்ச்சைக்கான காரணத்தை பற்றி பேசவில்லை காரணம் படத்தை பார்க்கவில்லை ஆனால் ஒன்று சர்சைக்க் குரிய காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை திரையிட ஆவன செதிருக்கலம். இன்னொரு விஷயம் படம் தயாராகி உடனடியாக திரைக்கு வரவில்லை நிறைய அவகாசம் இருந்தது இப்படி கடைசி நேரத்தில் அதாவது படம் வெளியாக இருக்கும் நேரத்தில் இப்படிப் பட்ட நடவடிக்கை ஏன்..?
Rate this:
அன்பழகன் - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
31 ஜன, 2013 - 10:52 Report Abuse
 அன்பழகன் படம் ரிலீஸ் ஆகாதது தமிழனுக்கு அவமானம்.
Rate this:
திரு மூர்த்தி - Gobichettipalayam,இந்தியா
31 ஜன, 2013 - 10:14 Report Abuse
 திரு மூர்த்தி இந்தியாவில் முன்னிலையில் இருக்கும் ஒரு தனிமனிதனுக்கு நடக்கும் இத்தகைய மறைமுக சூழ்ச்சிகள் ஒவ்வொரு தமிழனையும் அவமானப்படுத்தும் செயல்.இதற்கு களம் பதில் சொல்லும். இல்லையென்றால்....
Rate this:
sasikumar - bangalore,இந்தியா
31 ஜன, 2013 - 09:32 Report Abuse
 sasikumar இது எல்லாம் அரசியல் நாடகம் . மக்கள் பாடம் புகட்ட காத்து கொண்டிருக்கிறார்கள்
Rate this:
அசோக் குமார் - Trichy,இந்தியா
31 ஜன, 2013 - 09:17 Report Abuse
 அசோக் குமார் படத்தை தடை செய்ததன் மூலம் தான் சட்டம் ஒழுங்கு கெட்டு போக வழி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் முஸ்லிமிற்கு எதிரானது அல்ல என்று எடுத்து சொல்ல தவறியவர்கள் , ஒரே ஒருவரை பழிவாங்க, பத்து பெயரை கிளப்பிவிட்டு ஊரையே அடித்து கொள்ள (விவாதங்களால்) வைப்பது போல இருக்கிறது என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.
Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in