கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! | நஸ்ரியாநசீமுக்கு தமிழ் வசனங்களை புரிய வைத்த ஜெய்! | சீரியலிலும் புரட்சி செய்யப்போகிறார் பாரதிராஜா! | துணிக்கடை தொடங்கிய டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா தம்பதி! | அசைவம் பிடிக்காத அசைவ நடிகை வித்யாபாலன்! | சித்தார்த்துக்காக மெனக்கெட்ட சந்தானம்! | கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் கெளதம்! | மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்! |
விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கத்தை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்த மனு தொடர்பான விசாரணையில் விஸ்வரூபம் படத்திற்கு மீண்டும் தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. விஸ்வரூபம் பட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை ஐகோர்ட் நீதிபதி வெங்கட்ராமன் நேற்று நீக்கி உத்தரவிட்டார். ஆனால் விஸ்வரூபம் படத்திற்கு தடை நீக்கப்பட்டதை எதிர்த்து இந்த உத்தரவை இன்று காலை வரை நிறுத்தி வைக்க வேண்டும் என, கூடுதல் அட்வகேட்-ஜெனரல் அரவிந்த் பாண்டியன் கூறினார். ஆனால், அதை நீதிபதி எற்கவில்லை.
இதனையடுத்து இன்று இன்று காலை தமிழக அரசு தலைமை வக்கீல் நவநீத கிருஷ்ணன் படத்தை தடை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு தொடர்பான மனுவை தாக்கல் செய்தார். மேலும் வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்று வக்கீல் கேட்டு கொண்டார். ஆனால் நீதிபதி மறுத்துவிட்டார். இதனையடுத்து இந்தவழக்கு விசாரணை, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி பொறுப்பு எலிப் தர்மாராவ் மற்றும், அருணா ஜெகதீசனும் ஆகியோர் முன்னிலையில் வந்தது. வழக்கு விசாரணை மதியம் 2.30 மணிக்கு மேல் வந்தது.
அப்போது விஸ்வரூபம் படத்தை திரையிட்டால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும். ஏற்கனவே படம் ரிலீசாக வேண்டிய 540 தியேட்டர்களில் ஒருபதட்டமான சூழல் நிலவி வருகிறது எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என்று வக்கீல் நவநீத கிருஷ்ணன் வாதிட்டார்.
கமல் தரப்பு வக்கீல் வாதிடும்போது, வேண்டும் என்றே விஸ்வரூபம் படத்திற்கு எதிராக வன்முறை தூண்டப்படுகிறது. எனவே தடையை நிரந்தரமாக ரத்து செய்து தகுந்த பாதுகாப்புடன் படத்தை திரையிட உத்தர விட வேண்டும் என்று வாதாடினார்.
இருதரப்பு வாதத்தையும் ஏற்ற நீதிபதிகள் எலிப் தர்மாராவ் மற்றும், அருணா ஜெகதீசன் ஆகியோர் படத்தை மீண்டும் தடை செய்து உத்தரவு பிறப்பித்தனர். மேலும் இதுதொடர்பாக தமிழக அரசு உரிய விளக்கத்தை திங்கட்கிழமைக்குள் வழங்கும்படியும், அடுத்தகட்ட விசாரணையை பிப்-6ம் தேதிக்கும் தள்ளி வைத்து உத்தரவிட்டனர். கோர்ட்டின் இந்த உத்தரவால் விஸ்வரூபம் படம் இப்போதைக்கு ரிலீஸ் ஆகப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.
நான் சர்ச்சைக்கான காரணத்தை பற்றி பேசவில்லை காரணம் படத்தை பார்க்கவில்லை ஆனால் ஒன்று சர்சைக்க் குரிய காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை திரையிட ஆவன செதிருக்கலம். இன்னொரு விஷயம் படம் தயாராகி உடனடியாக திரைக்கு வரவில்லை நிறைய அவகாசம் இருந்தது இப்படி கடைசி நேரத்தில் அதாவது படம் வெளியாக இருக்கும் நேரத்தில் இப்படிப் பட்ட நடவடிக்கை ஏன்..?