Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சர்ச்‌சைக்குரிய காட்சிகளை நீக்க கமல் சம்மதம்

30 ஜன, 2013 - 15:22 IST
எழுத்தின் அளவு:

 விஸ்வரூபம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கமல் ஒப்புக்கொண்டுள்ளார். இதன்மூலம் முஸ்லிம் தரப்பினருக்கும், விஸ்வரூபம் படத்திற்கும் எந்த பிரச்னையும் வராது என்று கமல் கூறியுள்ளார். கமலின் விஸ்வரூபம் படத்திற்கு முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு இப்படத்தை தடை செய்தது தமிழக அரசு. ஆனால் இதனை எதிர்த்து கமல் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கட்ராம் விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கினார். இதனையடுத்து இப்படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்த்த நிலையில் தமிழக அரசு தரப்பில் தடை நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் மீண்டும் முஸ்லிம் அமைப்புகள் சிலருடன் செய்தியாளர்களை சந்தித்த கமல், படத்தில் விஸ்வரூபம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக சொல்கின்றனர். அதன்படி சில காட்சிகளை நீக்கும்படி எனது முஸ்லிம் சகோதரர்கள் கூறினார். இதனையடுத்து படத்தில் இருக்கும் சில காட்சிகளையும், வசனங்களையும் நீக்க முடிவு செய்துள்ளனர். இதன்மூலம் இனி முஸ்லிம் சகோதரர்களுக்கும், எனது விஸ்வரூபம் படத்திற்கும் எந்த பிரச்னையும் வராது.

அதேசமயம் படத்திற்கு வேறு விதமான பிரச்னைகள் வந்து கொண்டு இருக்கிறது. இது எனக்கும், நாட்டுக்கும் பதற்றம் தரக்கூடியாக செய்தியாக இருக்கிறது. எனக்கோ, எனது ரசிகர்களுக்கோ எதுவும் ஆபத்து வராமல் பாதுகாக்க வேண்டியது இந்த அரசின் கடமை என்றார்.

Advertisement
காஜல் அகர்வாலின் கிளாமர் கொள்கை!காஜல் அகர்வாலின் கிளாமர் கொள்கை! விஸ்வரூபம் படத்திற்கு மீண்டும் தடை! சென்னை ஐகோர்ட் உத்தரவு விஸ்வரூபம் படத்திற்கு மீண்டும் தடை! ...


வாசகர் கருத்து (5)

GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
02 பிப், 2013 - 00:49 Report Abuse
 GUNAVENDHAN இப்போது அட்செபமான பகுதிகளை நீக்கிவிட ஒப்புகொள்கிற கமல், அதை சென்ற வாரமே ஒப்புகொண்டிருந்தால் இந்த பிரச்சினைகளை சந்திக்கவேண்டிய நிலைமையே ஏற்பட்டிருக்காது. உயர்நீதிமன்ற நீதிபதிகளே , முஸ்லிம் அமைப்புகளுடன் பேசி தீர்த்துகொள்ளுமாறு தான் அறிவுறித்தி உள்ளனர். சட்டம் ஒழுங்கை பாதுக்காக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது. அரசு அதற்க்கு தான் முன்னுரிமை வழங்கும் , ஒரு படத்தை 524 தியேட்டரில் போலீசை வைத்து ஓட்டுவது அரசின் வேலை அல்ல.
Rate this:
thamilachi - chennai,இந்தியா
31 ஜன, 2013 - 13:14 Report Abuse
 thamilachi அணைத்து தடைகளும் விலகி உங்கள் படைப்பு வெற்றிகரமாக மாறும் என்று இறைவனை வேண்டுகிறோம்
Rate this:
மொக்கையன் - chennai,இந்தியா
30 ஜன, 2013 - 17:54 Report Abuse
 மொக்கையன் இதற்கு கமல் ஒத்து கொள்ள கூடாது ... இனி இன்னும் பிரச்சனை பண்ணுவாங்க ....
Rate this:
jayashree - dxb,ஐக்கிய அரபு நாடுகள்
30 ஜன, 2013 - 17:16 Report Abuse
 jayashree அப்போ சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்குன்னு நீங்களே accept பண்ணிடீங்க . உங்களால மதங்களை புண்படுத்தாமல் படம் எடுக்கமுடியாதா ?இல்ல எடுக்க தெரியாதா?
Rate this:
A .SELVARAJ - pondicherry,இந்தியா
30 ஜன, 2013 - 16:12 Report Abuse
 A .SELVARAJ விஸ்வரூபம் பிலிம் தடைசெய்தது தவறு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mr Chandramouli
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Karu
    • கரு
    • நடிகை : சாய் பல்லவி
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Pariyerum perumal

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in