Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

காஜல் அகர்வாலின் கிளாமர் கொள்கை!

Kajal agarwals glamour policyகவர்ச்சியாக நடிப்பேன், அதற்காக ஆடைகளை துறக்க மாட்டேன், என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.  அவர் அளித்துள்ள பேட்டியில், என்னை தென்னிந்திய நடிகை என்று வட நாட்டில் சொல்கிறார்கள். நான் தெற்கு மும்பையை சேர்ந்தவள். ஆரம்ப காலகட்டங்களில் தென்னிந்திய படங்களில் பணியாற்றச் சென்றபோது வேற்று கிரகவாசிபோல உணர்ந்தேன். மும்பையில் வளர்ந்ததால் தாராள எண்ணத்துடன் இருப்பேன். பாலிவுட் படங்களில் ஹீரோயின்கள் ஒல்லியாக இருந்தால்தான் மவுசு. தென்னிந்திய படங்களில் பூசினாற்போன்று இருந்தால்தான் மவுசு. தற்போது மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பாலிவுட்டில்கூட ஒல்லிக்குச்சி உடம்பு இருக்க வேண்டும் என்ற நிலை மாறி இருக்கிறது.

தொப்பை விழாத வரையில் ஹீரோயினாக நடிக்க முடியும். தொப்பை விழுந்தால் சான்ஸ் காலி. தென்னிந்திய படங்களில் மட்டுமல்ல இந்தி படங்களில் நடிக்கும்போதுகூட எனக்கென சில கொள்கைகள் வைத்திருக்கிறேன். கிளாமர் வேடங்களில் நடிக்க தயார். இறுக்கமான ஜீன்ஸ், பொருத்தமான குர்தாவில் பெண்களால் கவர்ச்சியாக இருக்க முடியும். ஆனால் கவர்ச்சி என்பதற்காக ஆடைகளை துறக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுபோல் என்னை நடிக்க சொல்லி இயக்குனர் கேட்டாலும் அந்த காட்சியை மாற்றும்படி அவரிடம் கேட்டுக்கொள்வேன், என்று கூறியிருக்கிறார்.

Tags »
Kajal agarwal, glamour policy, காஜல் அகர்வால், கிளாமர் கொள்கை,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

தொடர்புடைய படங்கள்

 
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in