ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக ரத்தம் சிந்திய வழக்கு எண் ஸ்ரீ! | சிம்புவுக்காக கோவா செல்லும் படக்குழு! | 100 நாட்கள் ஓடிய கமல், சசிகுமார் படங்கள்! | விஸ்வரூபம் படம் தொடர்பாக போலி கடிதம் ; கமல் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ் | மதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்! | ஊதி பெருத்து விட்டார் பூனம் பாஜ்வா! | ஷாரூக்கான் தயாரிக்கும் இந்தி படத்தில் ப்ருதிவிராஜ்! | புற்று நோயிலிருந்து விடுபட்ட மனீஷாகொய்லாரா மீண்டும் நடிக்க வருகிறார்! | ஸ்ருதிஹாசனை கவர்ந்த கிரிக்கெட் வீரர் ரெய்னா! | இணையதளத்தில் அஞ்சுஅரவிந்தின் ஆபாச படங்களை வெளியிட்டவர் கைது! |
கவர்ச்சியாக நடிப்பேன், அதற்காக ஆடைகளை துறக்க மாட்டேன், என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், என்னை தென்னிந்திய நடிகை என்று வட நாட்டில் சொல்கிறார்கள். நான் தெற்கு மும்பையை சேர்ந்தவள். ஆரம்ப காலகட்டங்களில் தென்னிந்திய படங்களில் பணியாற்றச் சென்றபோது வேற்று கிரகவாசிபோல உணர்ந்தேன். மும்பையில் வளர்ந்ததால் தாராள எண்ணத்துடன் இருப்பேன். பாலிவுட் படங்களில் ஹீரோயின்கள் ஒல்லியாக இருந்தால்தான் மவுசு. தென்னிந்திய படங்களில் பூசினாற்போன்று இருந்தால்தான் மவுசு. தற்போது மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பாலிவுட்டில்கூட ஒல்லிக்குச்சி உடம்பு இருக்க வேண்டும் என்ற நிலை மாறி இருக்கிறது.
தொப்பை விழாத வரையில் ஹீரோயினாக நடிக்க முடியும். தொப்பை விழுந்தால் சான்ஸ் காலி. தென்னிந்திய படங்களில் மட்டுமல்ல இந்தி படங்களில் நடிக்கும்போதுகூட எனக்கென சில கொள்கைகள் வைத்திருக்கிறேன். கிளாமர் வேடங்களில் நடிக்க தயார். இறுக்கமான ஜீன்ஸ், பொருத்தமான குர்தாவில் பெண்களால் கவர்ச்சியாக இருக்க முடியும். ஆனால் கவர்ச்சி என்பதற்காக ஆடைகளை துறக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுபோல் என்னை நடிக்க சொல்லி இயக்குனர் கேட்டாலும் அந்த காட்சியை மாற்றும்படி அவரிடம் கேட்டுக்கொள்வேன், என்று கூறியிருக்கிறார்.