தங்கையை ஸ்பாட்டுக்கு அழைத்து வரும் காஜல்அகர்வால்! | சுனைனாவுக்கு போட்டி போடும் ஸ்ரீகாந்த்- சந்தானம்! | விஜய்-முருகதாஸ் படத்திற்கு கொலவெறி அனிருத் இசை...! | 2 ஆண்டுக்குப் பிறகு பாட்டு பாடினார் வடிவேலு! | ராஜா ராணி திருமண அழைப்பிதழ்! நயன்தாரா கோபம்!! | நடிகைகளுக்கு மொழி பிரச்னை இல்லை! ஸ்ருதிஹாசன் | ஹீரோ, ஹீரோயின் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு! | லட்சுமிமேனனின் மறக்க முடியாத பிறந்த நாள்! | ஷாமிற்கு தெலுங்கு சினிமாதான் அதிர்ஷ்டமாம்! | காமெடிக்கு மாறுகிறார் லொடுக்குப்பாண்டி கருணாஸ்! |
மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என நினைக்கவில்லை; கண்ணா லட்டு திண்ண ஆசையா படம் ஜாலியான படமாக இருந்ததால் அதில் நடித்தேன், என்று படத்தின் நாயகி விசாகா சிங் கூறியுள்ளார். பிடிச்சிருக்கு படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் விசாகா சிங். அதன்பிறகு இந்தி, கன்னடம், ஆங்கில படங்களில் நடிக்க சென்று விட்டார். தற்போது கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் மீண்டும் தமிழில் நடித்துள்ளார்.
இதுபற்றி விசாகா அளித்துள்ள பேட்டியில், மீண்டும் தமிழில் நடிக்க வருவேன் என்று எண்ணவில்லை. ஆனால் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. 3 பேர் என்னை காதலிப்பதுபோல் கதை. ரொம்பவும் ஜாலியான ஷூட்டிங். ஜாலியான கதை என்பதால் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஒவ்வொரு காட்சியிலும் தேவதைபோல் அழகாக இருக்க வேண்டும் என்பதால் காஸ்டியூம் முதல் மேக்கப் வரை என் மீது கவனம் எடுத்துக்கொண்டனர், என்று கூறியுள்ளார்.