சினிமாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்- மாஜி நடிகை ராதா | விஜய்யுடன் டூயட் பாடுவது கனவாகி விட்டது- அருந்ததி புலம்பல் | ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக ரத்தம் சிந்திய வழக்கு எண் ஸ்ரீ! | சிம்புவுக்காக கோவா செல்லும் படக்குழு! | 100 நாட்கள் ஓடிய கமல், சசிகுமார் படங்கள்! | விஸ்வரூபம் படம் தொடர்பாக போலி கடிதம் ; கமல் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ் | மதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்! | ஊதி பெருத்து விட்டார் பூனம் பாஜ்வா! | ஷாரூக்கான் தயாரிக்கும் இந்தி படத்தில் ப்ருதிவிராஜ்! | புற்று நோயிலிருந்து விடுபட்ட மனீஷாகொய்லாரா மீண்டும் நடிக்க வருகிறார்! |
கடந்தாண்டு, இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, "லோக்பால் என்ற வார்த்தையை, தன் படத்துக்கு தலைப்பாக வைத்து, மலையாள ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார், ஜோஷி. இந்த படத்தில், மோகன் லால், ஒரு ஓட்டல் முதலாளியாக நடிக்கிறார். சமையல் கலையில், மிகவும் புகழ்பெற்றவர். இவருக்கு இந்த படத்தில், மற்றொரு முகமும் உண்டு. ஊழல் எங்கு நடந்தாலும், அங்கு தவறாமல் ஆஜராகி, தட்டிக் கேட்பார். "லோக்பால் என, பெயர் வைத்துள்ளதால், இந்த படம் முழுக்க முழுக்க, ஊழலுக்கு எதிரான விஷயங்கள் உள்ள, சமூக படம் என, நினைத்து விட வேண்டாம். காமெடியும், ஆக்ஷனும், சம விகிதத்தில் கலந்த, ஜனரஞ்சகமான படம் என, உத்தரவாதம் அளிக்கிறார், இயக்குனர், ஜோஷி. இந்த படத்தின் மூலம், காவ்யா மாதவன், தன் அடுத்த இன்னிங்சை துவக்கியுள்ளார். மீரா நந்தன், மனோஜ் கே ஜெயன், தம்பி ராமய்யா, தலைவாசல் விஜய், உள்ளிட்டோரும், இதில் நடித்துள்ளனர்.