பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
பாப் பாடகியும், ஹாலிவுட் நடிகையுமான, ஜெனிபர் லோபசுக்கு, 43 வயதாகி விட்டது. நான்கு குழந்தைகளுக்கு தாயார். "வயதாகி விட்டதே, இனிமேலும், ஹாலிவுட்டில்,உங்களால் தாக்குப் பிடிக்க முடியுமா என, அவரிடம் கேட்டால், சீறுகிறார். "என்னை பொறுத்தவரை, வயது என்பது, ஒரு எண்ணிக்கை மட்டுமே. அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிப்பது இல்லை. படங்களில் நடிப்பதற்கும், நடனமாடுவதற்கும், பாட்டுப் பாடுவதற்கும், முழு தகுதியுடனும், திறமையுடனும் இருக்கிறேன். உடலும், மனதும், இளமையாக உள்ளன. உலகம் முழுவதும் சென்று, இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன். சோம்பலாக, எப்போதும், உணர்ந்தது இல்லை. 24 வயதில், எப்படி இருந்தேனோ, அப்படித் தான், இப்போதும் இருக்கிறேன். எனவே, இனியொரு முறை, எனக்கு வயதாகி விட்டதாக, கேள்வி கேட்காதீர்கள் என, பொரிந்து தள்ளினார்.