தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
"அங்காடி தெரு அஞ்சலி, தமிழில் பெயர் சொல்லும் அளவிலான படங்களில் நடித்திருந்தாலும், தொடர்ந்து, நிலையான இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு, ரொம்பவே மெனக் கெடுகிறார். சமீபத்தில், தெலுங்கில், இவர் நடித்து வெளியான,"சீதம்மா வகிட்லோ ஸ்ரீமல்லி செட்டு படம், பரபரப்பாக ஓடியதால், தெலுங்கில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். இதன் எதிரொலியாக, தற்போது,"பலுபு என்ற படத்தில் நடிக்க, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
"தமிழை விட, தெலுங்கிற்கு தான், அதிக முக்கியத்துவம் அளிக்கிறீர்கள் போல் தெரிகிறதே என, கேட்டால், சூடாகிறாராம்.
" அப்படியெல்லாம் எதுவுமில்லை. வத்திக்குச்சி, மதகஜ ராஜா, சேட்டை, ஒன்பதுல குரு உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறேன். இதுதவிர, "சிங்கம் 2 படத்தில், சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறேன். தமிழுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறேன் என்கிறார்.