Advertisement

சிறப்புச்செய்திகள்

விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட்

29 ஜன, 2013 - 15:03 IST
எழுத்தின் அளவு:

 சென்னை: கமல் நடித்துள்ள, "விஸ்வரூபம் படத்தை, தியேட்டர்களில் திரையிட மாவட்ட கலெக்டர்கள் பிறப்பித்த தடை உத்தரவிற்கு, சென்னை ஐகோர்ட் தடை விதித்தது. மாவட்ட கலெக்டர்கள் பிறப்பித்த தடை உத்தரவை சென்னை ஐகோர்ட் நிறுத்தி வைத்துள்ளது. இதனிடையே இன்று காலை பத்திரிகையாளர்களை நடிகர் கமல்ஹாசன் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 முஸ்லிம் அமைப்பினரின் எதிர்ப்பால் தமிழகத்தில் விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து கமல் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் மாவட்டங்கள் தோறும் விதிக்கப்பட்டு இருக்கும் தடையை எதிர்த்தும் ஒருவழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை நீதிபதி வெங்கட்ராம் விசாரித்தார்.

தணிக்கை சான்றில் முறைகேடு : தமிழக அரசு சார்பில் தலைமை வக்கீல் நவநீத கிருஷ்ணன் வாதிட்டார். அவர் வாதிடும்போது, விஸ்வரூபம் படத்திற்கு அளிக்கப்பட்ட தணிக்கை சான்றே தவறானது. இந்தபடத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றில் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட வேண்டும். மேலும் நான்கு பேர் மட்டுமே ஒரு படத்தை பார்த்து சான்று அளிப்பதை ஏற்க முடியாது. அனைவரும் பார்க்க வேண்டும், குறிப்பாக சம்பந்தப்பட்டவர்கள் பார்த்து அனுமதி தர வேண்டும். எனவே இந்தப் படத்தைத் திரையிட தடை விதிக்கப்பட்டது சரியே என்று வாதிட்டார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதா...?
கமல் தரப்பில் வக்கீல் பி.எஸ்.ராமன் வாதிடும்போது, விஸ்வரூபம் படத்தை எதிர்த்து ஒரே சமயத்தில் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை சட்டத்தை உபயோகப்படுத்தியுள்ளனர். அந்தளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுபோய் உள்ளதா...? இதுகுறித்து தமிழக அரசு விளக்க வேண்டும் என்றார்.

மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது : தொடர்ந்து வழக்கு விசாரணை மதியத்திற்கு ‌மேல் வந்தபோது, கமல் தரப்பு வழக்கறிஞர் ராமன் வாதிடுகையில், சட்டப்படி சென்சார் செய்த படத்தை தடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது. மேலும் படத்தில் இந்திய முஸ்லிம் அமைப்புகளை பற்றி எந்த ஒரு தவறான காட்சிகளும் இல்லை. முஸ்லிம் அமைப்பினரை புண்படுத்தும் காட்சிகள் ஏதும் இல்லை. இப்படம் கேரளா மற்றும் ஆந்திராக்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக கேரளாவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் மலபார் என்ற பகுதியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படத்திற்காக கமல் தனது வாழ்நாளில் சம்பாதித்த மொத்த பணத்தையும் முதலீடு செய்துள்ளார். அப்படிப்பட்ட சூழலில் படம் வெளியாகமல் இருந்தால் அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்று வாதிட்டார்.

வழக்கு தொடர கமலுக்கு உரிமை இல்லை : தொடர்ந்து அரசு தரப்பில் வாதிடும்போது, விஸ்வரூபம் என்ற படத்தை விநியோகஸ்தர்களுக்கு கமல் விற்றுவிட்டார். அதனால் படத்திற்கான உரிமையும் இப்போது அவரிடம் இல்லை. எனவே சட்டப்படி அவர் வழக்கு தொடரவே உரிமை கிடையாது என்று வாதிட்டார்.

தணிக்கை வாரியத்தின் மீதான குற்றம் ஆதாரமற்றது : விஸ்வரூபம் படம் தடை விதிக்கப்பட்டது தொடர்பாக தணிக்கை குழு சார்பில் ஆஜரான வக்கீல் வில்சன் வாதிடுகையில், விஸ்வரூபம் படத்தின் காட்சி அமைப்புகளுக்கான ஆதாரத்தின் அடிப்படையில் சான்று கொடுக்கப்பட்டது. படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய 14 காட்சிகள், கிட்டத்தட்ட 1.8 நிமிட காட்சிகள் நீக்கப்பட்ட பின்னரே சான்று அளிக்கப்பட்டது. தணிக்கை வாரியத்தின் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றார்.

விசாரணை முடிந்தது : விஸ்வரூபம் படம் தொடர்பாக கமல் தரப்பு, அரசு தரப்பு, தணிக்கை தரப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தது. இதனையடுத்து தீர்‌ப்பு இரவு இரவு 8 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி வெங்கட்ராமன்அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கின் மீதான தீர்ப்பு இரவு 10 மணிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று இரவு 10:15 மணி அளவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிபதி வெங்கட்ராமன் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கின் ஒட்டு மொத்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, குற்றவியல் நடைமுறை சட்டபிரிவு, 144ன் கீழ் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த உத்தரவை அமல்படுத்த தடை விதிக்கப்படுகிறது.மேலும், இப்படத்தை வெளியிடும் மனுதாரரின் உரிமையில் குறுக்கிட அரசுக்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வழக்கில் ஆரம்ப முகாந்திரம் உள்ளதால், இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. பதில் மனு தாக்கல் செய்தபின், சட்டப்படி தகுதி அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள், "சினி மோட்டே கிராப் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட உரிய அமைப்பில் மனு தாக்கல் செய்யலாம், அதற்கு இந்த உத்தரவு தடையாக இருக்காது.இவ்வாறு நீதிபதி வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை இன்று காலை வரை நிறுத்தி வைக்க வேண்டும் என, கூடுதல் அட்வகேட்-ஜெனரல் அரவிந்த் பாண்டியன் கூறினார். ஆனால், அதை நீதிபதி எற்கவில்லை. இந்த வழக்கு விசாரணையையொட்டி, சென்னை ஐகோர்ட்டில் நேற்று போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இதற்கிடையே, ஐ கோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதையொட்டி, இந்த மனு மீதான விசாரணை, இன்று நடைபெறும் என தெரிகிறது

விஸ்வரூபம் படம் மீதான தடை விலக்கப்பட்டதை தொடர்ந்து, கமல் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

கமல் சந்திப்பு: விஸ்வரூபம் படத்திற்கான தடை சென்னை ஐகோர்ட் விலக்கியுள்ளதை தொடர்ந்து, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முயற்சிகள் நடந்து வருகிறது. இதனையடுத்து, இன்று காலை 10.30 மணியளவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை, விஸ்வரூபம் பட கதாநாயகன் கமல் அவசரமாக சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, விஸ்வரூபம் படம் வெளியிடுவது பற்றி தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (21) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (21)

sirajudeen - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
30 ஜன, 2013 - 14:38 Report Abuse
 sirajudeen i like கமல்.அரசியல் சுய லாபதிக்காக சில இஸ்லாமிய அரசீயல்வதிகலும்,தமிழக அரசும் இணைத்து நடத்திய நாடகம் என்பது உருதிபதுத்தபட்டு உள்ளது .தமிழக அரசே அரசியல் சுயனலவதிகளே மக்களுடனும் முஸ்லிம்களுடனும் விளையாடாதே தயவு சயீது படத்தை ரிலீஸ் செய்யவும்
Rate this:
vasu - SALEM,இந்தியா
30 ஜன, 2013 - 13:27 Report Abuse
 vasu தேவை இல்லாத வேலை
Rate this:
அசோக் குமார் - Trichy,இந்தியா
30 ஜன, 2013 - 13:18 Report Abuse
 அசோக் குமார் மக்களின் நலனில் மட்டுமே முழு அக்கறை கொண்டதாக காட்டிகொள்ளும் அரசு செய்ய வேண்டிய காரியங்கள் எத்தனை எத்தனையோ உள்ளது. மது பான கடைகளால் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கும் தீங்கை விட வேறு ஒன்றும் வந்துவிடபோவதில்லை. பலர் அமைப்புகள் மது பான கடைகளை அகற்ற கோரிக்கை விடுத்தபோது கொஞ்சம் கூட காதில் வாங்கி கொள்ளாத இந்த அரசு, ஒரு படத்தினால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்று கூறுவதும், தியேட்டர்களில் போலீஸ் காரர்களே படத்தை ஓட்டகூடாது என்று சொல்லி தடுத்து நிறுத்துவதும் சரியா?. ஒரு கலைஞன் வேறு மாநிலத்தில் குடியேருவேன் என்று சொல்வது தமிழ் நாட்டுக்கு அழகா?.
Rate this:
மணிகுமார் - bengaluru,இந்தியா
30 ஜன, 2013 - 13:12 Report Abuse
 மணிகுமார் அருமையான படம் எல்லாரும் பார்க்க வேண்டிய படம் ... its a war against jaya govt and INTELLINGENT KAMALHASSAN.. WE LL BACK U KAMAL GO A HEAD
Rate this:
shankar - Chennai,இந்தியா
30 ஜன, 2013 - 12:10 Report Abuse
 shankar இது அந்த பகவானுக்கு வந்த சோதனை கமல் கலங்க வேண்டாம் நீங்கள் பகவன் நம்பிக்கை இல்லாதவர் இருந்தாலும் அவர் உங்களை கைவிட மாட்டார்
Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in