Advertisement

சிறப்புச்செய்திகள்

அமெரிக்கா, இங்கிலாந்தில் விஸ்வரூபம் வசூல் சாதனை...!!

29 ஜன, 2013 - 12:53 IST
எழுத்தின் அளவு:

இந்தியாவில் விஸ்வரூபம் படத்திற்கு சிக்கல் எழுந்துள்ள நிலையில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் விஸ்வரூபம் வசூல் சாதனை படைத்து வருகிறது. கமல் நடித்து, இயக்கி, 3 மொழிகளில் தயாரித்துள்ள படம் விஸ்வரூபம். இப்படம் கடந்த 25ம் தேதி ரிலீஸ் ஆனது. ஆனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இப்படம் ரிலீஸ் ஆகவில்லை. காரணம் இப்படத்தில் முஸ்லிம் மதத்தவரை தவறாக சித்தரிப்பதாக கூறி முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்து தெரிவித்தன. இதனையடுத்து சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு இப்படத்தை தடை செய்தது தமிழக அரசு. ஆனால் இப்படத்தை தடை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கமல் தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று(29.01.13) வர இருக்கிறது. இதற்கிடையே தமிழகத்தில் உதித்த இந்த எதிர்ப்பு இப்போது மற்ற மாநிலங்களிலும் உருவாகியுள்ளது. இதனால் விஸ்வரூபம் படம் இந்தியாவில் பெரும் சிக்கலை சந்தித்துள்ளது. இதனால் படத்தின் வசூல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் ரூ.30 கோடி இழப்பீடு ஏற்பட்டதாக ஒரு சர்வே தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் இப்படம் முடங்கி இருந்தாலும் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இங்கிலாந்தில் சுமார் 19 தியேட்டர்களில் வெளியான விஸ்வரூபம் படம் ரூ.81.23 லட்சம் வசூல் செய்துள்ளது. அதேபோல் அமெரிக்காவில் 44 தியேட்டர்களில் ரிலீஸான இப்படம் ரூ.3.43 கோடி வசூல் செய்துள்ளது. தொடர்ந்து அந்நாட்டு மக்கள் இடையே இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் இப்படம் இன்னும் வசூல் சாதனை படைக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

antony - thajavur,இந்தியா
31 ஜன, 2013 - 11:01 Report Abuse
 antony Best விஷேஸ் to கமல் 90% people are வித் யு.
Rate this:
வெள்ளையத்தேவன் - veliyoor,இந்தியா
31 ஜன, 2013 - 01:46 Report Abuse
 வெள்ளையத்தேவன் நீதி ஜெயிக்கும் கமல் சார், உலக நாயகன் நீங்க
Rate this:
gthilaga - chennai,இந்தியா
30 ஜன, 2013 - 22:31 Report Abuse
 gthilaga சரித்திர நாயகன் படம் சரித்திரம் படைக்க வைப்போம் ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான் ஆனால் நிச்சயம் கை விட மாட்டான்
Rate this:
முருகவேல் - Murthikuppam pondy,இந்தியா
30 ஜன, 2013 - 10:40 Report Abuse
 முருகவேல் நன்றி நீதி துறை
Rate this:
முருகவேல் - Moorthikuppam pondy,இந்தியா
30 ஜன, 2013 - 10:38 Report Abuse
 முருகவேல் கமல் சார் உங்கள் சிந்தனைக்கும், என்னங்களுக்கும் மற்றும் முயற்சிக்கும் மிகப்பெரிய வெற்றி - நன்றி நீதி துறை
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in