அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
அருந்ததிக்கு பிறகு படு பிசியான நடிகையாகி விட்டார் அனுஷ்கா. இரவு பகல் என்று இடைவிடாத படப்பிடிப்புகளில் இருந்து வருகிறார். ஆனால் அவரது அயராத உழைப்பைப் பார்த்த அவரது அபிமானிகள், உடம்புக்கும், மனதுக்கும் ரெஸ்ட் தேவை, இல்லையேல் அது வேறுவிதமான பிரச்னைகளை உருவாக்கி விடும் என்று அட்வைஸ் செய்து வந்தார்களாம். அதனால் சமீபகாலமாக மாதத்தில் இரண்டொரு நாட்கள் அவசிய ஓய்வு என்பதை கடைபிடிக்கத் தொடங்கியிருக்கிறார் அனுஷ்கா.
அப்படி ஓய்வெடுப்பவர், முன்கூட்டியே தனது தோழிகளுக்கு தெரியப்படுத்தி, ஜாலியாக ஊர் சுற்றுகிறாராம். விளையாட்டு மைதானம், நீச்சல் குளம் என்று சில நாட்கள் ஜாலியாக பொழுதை கழிக்கும் அனுஷ்கா, பின்னர் தனது தோழிகள் அனைவரும் தனது செலவிலேயே ஸ்டார் ஹோட்டலில் மெகா விருந்தும் வைக்கிறாராம். அதற்காக பல லட்சங்கள் செலவானாலும் கவலைப்படுவதில்லையாம். இந்த செலவை விட எனது தோழிகளால் எனக்கு கிடைக்கும் சந்தோசம் கோடிகளுக்கு சமமானது என்று கூறி வருகிறார் நடிகை.