Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்து அமைப்புகளின் அதிரடியினால் அமீர்-ஜெயம்ரவி அப்செட்!

29 ஜன, 2013 - 10:38 IST
எழுத்தின் அளவு:

கமலின் விஸ்வரூபம் படத்திற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதைத் தொடர்ந்து, இப்போது இயக்குனரான அமீர் இயக்கியுள்ள ஆதிபகவன் படத்திற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக, ஜீவா நடிப்பில் அமீர் இயக்கிய ராம் படத்தில் இந்து கடவுளான ராமரின் பெயரை ஜீவாவுக்கு வைத்ததோடு, ஜீவாவை சைக்கோ போன்றும் காண்பித்திருந்தார். ஆனால் அதை படமாகவே பார்த்தால் அப்போது இந்துக்களோ, இந்து அமைப்புகளோ யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

அதிலும் தற்போது ஜெயம்ரவியை நாயகனாக வைத்து அமீர் இயக்கியுள்ள ஆதிபகவன் என்ற தலைப்பு இந்து கடவுகள்களான விநாயகர் மற்றும் சிவபெருமானை குறிக்கும் என்பதால் அந்த தலைப்பை உடனே மாற்ற வேண்டும் என்று போர்க்கொடி பிடித்துள்ளனர். அதோடு, ஆதிபகவன் படத்தில் இந்து கடவுள்களை அவமதிப்பது போன்ற காட்சிகள் இருப்பதாகவும் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால் தணிக்கைகுழுவுக்கு படத்தை அனுப்புவதற்கு முன்பாக படத்தை தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்ற இந்து அரசியல் கட்சிகள் மற்றும் இந்து அமைப்பினர்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும் என்றும் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த புதிய சிக்கலினால் படத்தின் இயக்குனரான அமீரும், நாயகன் ஜெயம் ரவியும் கடும் அப்செட்டில் உள்ளார்களாம். தொடர்ந்து தமிழ்சினிமாவில் இதுபோன்று எழும் ‌பிரச்னைகளால் மனமுடைந்துள்ளனர் ஆதிபகவன் படக்குழுவினர்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

arumugam - chennai,இந்தியா
06 மார், 2013 - 23:18 Report Abuse
arumugam அமீர் நீங்கள் ஒரு இந்தியன் என்பதே மறந்து விடாதீர்கள்,பிறகு தமிழன் என்பதையும் மறந்து வீடாதீர்கள்,தமிழனுயும் தலிபான்களையும் கம்பர் பானதிர்கள் இந்திய நாட்டை மட்டுமும் சிந்திக்கவும்
Rate this:
indian - chennai  ( Posted via: Dinamalar Android App )
30 ஜன, 2013 - 10:11 Report Abuse
indian எவ்வளவோ கச்டப்படுத்தி்யாச்சு இன்னும் காயப்படுத்த என்ன இருக்கு அமீர் இடம் ...சப்போர்ட் பண்ணமாட்டீங்களே வாழ்க வளமுடன்
Rate this:
vijay - Bangalore  ( Posted via: Dinamalar Android App )
30 ஜன, 2013 - 08:09 Report Abuse
vijay There is no unity in our country :-(
Rate this:
king da - mannargudi  ( Posted via: Dinamalar Android App )
30 ஜன, 2013 - 07:58 Report Abuse
king da முதலில் ஆதி்பகவான் படதை தமிழக மக்களுகு போட்டு கண்பித்த பிறகு வெளியிடூகள் அமீர்
Rate this:
kuttypoo - vellore,இந்தியா
29 ஜன, 2013 - 14:58 Report Abuse
 kuttypoo நாட்டுல எவ்வளவோ பிரச்சன்னை இருக்கு அதை விட்டுட்டு படத்துக்கு அரசாங்கம் ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கறாங்க
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in