Advertisement

சிறப்புச்செய்திகள்

தியேட்டர்களுக்கு முன்பாக டி.டி.எச்-ல் வெளியாகுமா விஸ்வரூபம்...?!!

29 ஜன, 2013 - 10:07 IST
எழுத்தின் அளவு:

"விஸ்வரூபம் திரைப்படத்தை, தமிழக திரையரங்குகளில் வெளியிட தடை நீடிக்கும் நிலையில், பிப்., 2ம்தேதி, டி.டி.எச்., வாயிலாக வெளியிட கமல் தரப்பு முயற்சி மேற்கொண்டுள்ளது. டி.டி.எச்., வாயிலாக ஒளிபரப்புவதை, மாநில அரசு தடுக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.,ல் வெளியிட, கமல் முடிவு செய்ததால் தான், முதல் பிரச்னை எழுந்தது. "டி.டி.எச்.,ல் வெளியிட்டால், திரையரங்குகளில் வெளியிட மாட்டோம்; திரையரங்குகளில் முதலில் வெளியிட்ட பின், படம் ஓடுவதற்கு, கால அவகாசம் கொடுக்க வேண்டும். அதன் பின்பே, டி.டி.எச்.,ல் வெளியிட வேண்டும் என, திரையரங்கு உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கினர்.

கமல் சமாதானம்:
"டி.டி.எச்., புதிய தொழில்நுட்பம்; அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்; டி.டி.எச்.,ல் படம் வெளியாவதால், திரையரங்கு வசூல் பாதிக்காது என, கமல் சமாதானம் செய்து பார்த்தார்.ஆனால், திரையரங்கு உரிமையாளர்கள் விடாப்பிடியாக இருந்ததால், திரையரங்கில், ஜன., 25ம் தேதியும், டி.டி.எச்.,ல், பிப்., 2ம் தேதியும் வெளியாகும் என, கமல் அறிவித்தார்.ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், முஸ்லிம்களின் எதிர்ப்பால், விஸ்வரூபம் படத்திற்கு இரண்டு வார தடையை, தமிழக அரசு விதித்துவிட்டது. விஸ்வரூபம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான, ராஜ்கமல், சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், தீர்ப்பு இன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தடை கோரி மனு:
இந்த இக்கட்டான சூழலில், டி.டி.எச்., மூலம், பிப்., 2ம்தேதி விஸ்வரூபம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. திரையரங்குகளில் வெளியிட மட்டுமே, தமிழக அரசால் தடை விதிக்க முடியும்.மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், "டிவி ஒளிபரப்புகளை கட்டுப்படுத்துவதால், டி.டி.எச்., ஒளிபரப்புக்கு தடை விதிக்க முடியாது என, தமிழக அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. "விஸ்வரூபம் படத்தை வெளியிட, எந்ததெந்த, டி.டி.எச்., நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளனரோ, அந்த நிறுவனங்களுக்கு, படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என, முஸ்லிம்கள் தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விதி உள்ளது : இந்தியாவின் பல மாநிலங்கள் மட்டுமல்லாமல், பல நாடுகள் விஸ்வரூபம் படத்தை திரையிட அனுமதித்துள்ளன. இந்நிலையில், செயற்கைகோள் ஒளிபரப்பில், ஒருபகுதிக்கு மட்டும் தடை செய்ய முடியுமா என்ற கேள்வியை, சைபர் கிரைம் அதிகாரிகள் எழுப்புகின்றனர். ஜாதி, மத உணர்வுகளை புண்படுத்துதல், பெண்கள், குழந்தைகளை பாதிக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புதல், தனிப்பட்டவரின் சுதந்திரத்தை அவமதிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் இடம்பெறுதல் ஆகியவற்றுக்கு, தொலைத் தொடர்பு ஒளிபரப்பு ஆணையம் தடை விதிக்கிறது. எனவே, மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் விஸ்வரூபம் படம் உள்ளது என்ற குற்றச்சாட்டுக்கு, ஒழுங்குமுறை ஆணை விதி ஒத்துவருவதால், டி.டி.எச்.,ல் ஒளிபரப்பவும் தடை விதிக்கப்படும் என, கேபிள் எம்.எல்.ஓ.,க்கள் தெரிவிக்கின்றனர்.

நஷ்டத்தை தடுக்க: படத்தை, 100 கோடி ரூபாயில் தயாரித்து, திரையிட தாமதம் ஆவதால், பெரும் நஷ்டம் கமலுக்கு ஏற்படுகிறது. கோர்ட் போராட்டத்தைக் கடந்து, படம் வெளியாவதற்கு நீண்ட காலம் ஆகும்.மேலும், ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்குதல், அதற்கு ஏற்றாற் போல் படத்தை முழுமைப்படுத்துதல் போன்ற பணிகளுக்கு அவகாசம் தேவைப்படும். எனவே, டி.டி.எச்., வாயிலாக படத்தை வெளியிட, கமல் தரப்பு தீவிரம் காட்டி வருகிறது.

- நமது சிறப்பு நிருபர் -


Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

APSAR - Al Khobar,சவுதி அரேபியா
29 ஜன, 2013 - 13:01 Report Abuse
 APSAR சினிமாவை சினிமாவாக பார்ப்போம்னு சொல்றாங்க,அப்புறம் ஏன் முஸ்லிம்களை மட்டும் தீவிரவாதிகளா சித்தரிக்கனும்?முதலில் சினிமாவை சினிமாவாக பார்க்கும் சூழல் இங்கு உள்ளதா?இன்னும் முதல்வர்களை தமிழ்சினிமாவில் இருந்தே தேர்ந்தெடுக்கும் மனமுதிர்ச்சியில்தானே தமிழன் இருக்கிறான்?
Rate this:
Vishva - tirupur  ( Posted via: Dinamalar Android App )
29 ஜன, 2013 - 12:58 Report Abuse
Vishva பாவம் டா அந்த மனுசன்
Rate this:
as a common man - chennai  ( Posted via: Dinamalar Android App )
29 ஜன, 2013 - 12:39 Report Abuse
as a common man கலவரம் ஏற்பட்டால் யார் பொறுப்பு? அறிவாளிகளே! சிந்தி்ப்பீர். அரசுக்கு தெரியாதா ?
Rate this:
Madhu - bangalore  ( Posted via: Dinamalar Android App )
29 ஜன, 2013 - 11:35 Report Abuse
Madhu வாசிம்கானை கேப்டன் வல்லரசு தரதரன்னு இழுத்தி்ட்டு வரும்போது எங்கப்பா போயிருந்தி்ங்க. Kamal made this movie against terrorist not muslims. ஓட்டுக்காக அரசு இந்த சகோதர்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறது
Rate this:
தமிழன் - தமிழன்,இந்தியா
29 ஜன, 2013 - 11:28 Report Abuse
 தமிழன் திரை படங்கலை பொழுதுபோக்கு விஷயமாக பாருங்கள் , உங்களுடைய தனிப்பட்ட கருத்துகளை மற்றவர்கள் மீது தினிக்காதீர்கள் . ஒரு தமிழன் தன் திறமையை வைத்து நமது பொழுதுபோக்கு அம்சத்தை உலக அளவில் கொண்டுசெல்கிறான் என்றால் அது நாம் அனைவரும் பெருமை பட வேண்டிய விஷயம் . ஒரு தமிழனை நாமே கலங்கவைப்பது வருத்தத்துக்குரிய செயல் . தமிழன் என்று தலை நிமிந்து நின்ற காலம் போய் விட்டு இப்போது தமிழனே இன்னொரு தமிழன் காலை வாரிவிடும் காலம் வந்து விட்டது . சற்று சிந்தியுங்கள் தமிழர்களே . சிந்தித்தால் மட்டும் போதாது , செயல் படுத்துங்கள் ..
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in