Advertisement

சிறப்புச்செய்திகள்

விஸ்வரூபம் பாணியில் அமீரின் ஆதிபகவனுக்கும் சிக்கல்...!

28 ஜன, 2013 - 17:30 IST
எழுத்தின் அளவு:

விஸ்வரூபம் பாணியில் அமீரின் ஆதிபகவன் படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. அமீர் இயக்கத்தில், ஜெயம் ரவி, நீத்து சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆதிபகவன். மாபியா கும்பலை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தமாதம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கு ஒரு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.

ஆதிபகவன் படத்தில் இந்து கடவுளை அவமதிப்பது போன்ற காட்சிகள் இருப்பதாக ஐகோர்ட் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான குழுவினர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, அமீர் தன்னுடைய ராம் படத்தில், இந்து கடவுளான ராமரை, ராம் என்று சுருக்கி ஹீரோ ஜீவாவை சைக்கோ போன்று காட்டினார். இப்போது ஆதிபகவன் என்ற படத்தை எடுத்துள்ளார். படத்தின் தலைப்பு இந்து கடவுள்கள் விநாயகர்  மற்றும் சிவபெருமானை குறிக்கிறது. படத்தில் இந்து கடவுள்களை அவமதிப்பது போன்ற காட்சிகள் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே படத்தை திரையிடுவதற்கு முன்பாக, இந்திய தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்ற இந்து அரசியல் கட்சிகள் மற்றும் இந்து அமைப்பினருக்கும் திரையிட்டு காட்ட வேண்டும். மேலும் படத்தின் தலைப்பான ஆதிபகவன் என்பதையும் மாற்ற வேண்டும் என்று தங்களது புகார் மனுவில் கூறியுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (47) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (47)

Tmail priyan - Delhi  ( Posted via: Dinamalar Android App )
29 ஜன, 2013 - 14:58 Report Abuse
Tmail priyan மதம் மனிதனை விழுங்க ஆரம்பித்து விட்டது இனி இது தொடரும்
Rate this:
பாலசுப்ரமணி - tamil nadu,இந்தியா
29 ஜன, 2013 - 14:45 Report Abuse
 பாலசுப்ரமணி விஸ்வரூபம் தமிழ் நாட்டுல ரிலீஸ் ஆகனும் சட்டம் ஒரு இருட்டறை .
Rate this:
அப்பு - madurai,இந்தியா
29 ஜன, 2013 - 14:30 Report Abuse
 அப்பு அன்பர் அப்துல் ரஹீமின் கருத்து உணர்வுப்பூர்வமான உண்மை.
Rate this:
பிரபு - chennai,இந்தியா
29 ஜன, 2013 - 14:08 Report Abuse
 பிரபு next David tittle Cancel
Rate this:
AR - singapore,இந்தியா
29 ஜன, 2013 - 13:33 Report Abuse
 AR கோச்சடையன் தடை வரணும்
Rate this:
மேலும் 42 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in