Advertisement

சிறப்புச்செய்திகள்

விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |

விஸ்வரூபம் தடையால் ரூ.30 கோடி நஷ்டம்...!!

28 ஜன, 2013 - 14:13 IST
எழுத்தின் அளவு:

கமலின், விஸ்வரூபம் படத்தின் தடையால் கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.30 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தடை தொடர்ந்தால் மேலும் இது அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. கமல்ஹாசனின் பிரம்மாண்ட நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் விஸ்வரூபம். இப்படம் கடந்த வாரம் 25ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆனது. ஆனால் தமிழகத்தில் முஸ்லிம் அமைப்பினரின் எதிர்ப்பால், சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு இப்படத்தை இரண்டு வாரகாலத்திற்கு தடை செய்தது தமிழக அரசு. இதனால் தமிழகம், புதுவை தவிர்த்து இந்தியாவின் பிறமாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் இப்படம் ரிலீஸ் ஆனது. இதேபோல் அமெரிக்கா, மலேசியா, போன்ற நாடுகளிலும் இப்படம் ரிலீசானது.

பிறமாநிலங்களிலும் தடை : கேரளாவில் சுமார் 80 தியேட்டர்களிலும், ஆந்திராவில் 100 தியேட்டர்களிலும், கர்நாடகாவில் 40 தியேட்டர்களிலும் விஸ்வரூபம் படம் ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆன முதல்நாள் மட்டுமே பெரும்பாலன தியேட்டர்களில் இப்படம் ஓடியது. ஆனால் அதன்பிறகு இப்படத்திற்கு அம்மாநிலங்களில் உள்ள முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழகத்தை போல பிறமாநிலங்களிலும் இப்படத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தமட்டில் கேரளாவை தவிர்த்து மற்ற மாநிலங்களில் இப்படம் தடை செய்யப்பட்டுள்ளது.

மலேசியாவிலும் தடை : மலேசியாவிலும் விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் ஆன முதல்நாளுக்கு பிறகு படத்தை பார்த்த அங்குள்ள முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இப்படத்தை தடை செய்துள்ளது அந்நாட்டு அரசு.

ரூ.30 கோடி இழப்பு :
விஸ்வரூபம் படத்தை திரையிட முடியாததால் கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் ரூ.30 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மும்பையை சேர்ந்த மல்டி மீடியா நிறுவன வினியோகஸ்தர் ராஜேஸ் தடானி கூறியுள்ளதாவது, கடந்த 3 நாட்களில் இந்த படம் முடக்கம் காரணமாக அனைத்து தரப்பினருக்கும் ரூ.30 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தடை நீடித்தால் இழப்பு தொகை மேலும் அதிகரிக்கும் என்றார். இதே கருத்தை ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் உள்ள விநியோகஸ்தர்களும் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனில் ரூ.57 லட்சம் வசூல் :
அதேசமயம் இங்கிலாந்தில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. திரையிடப்பட்ட நாளில் இருந்து இதுநாள் வரை அதாவது 3நாளில் சுமார் ரூ.57 லட்சம் வசூல் செய்துள்ளது.

Advertisement
கருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (17)

TAUFIQ - malaysia,மலேஷியா
29 ஜன, 2013 - 17:38 Report Abuse
 TAUFIQ யார் மனதையும் புண் படுத்தாமல் படம் எடுங்க சார் .....ப்ளீஸ்.....
Rate this:
nataraj - cuddalore  ( Posted via: Dinamalar Android App )
29 ஜன, 2013 - 06:41 Report Abuse
nataraj please release the movie no one affect
Rate this:
காயத்ரி - Chennai,இந்தியா
28 ஜன, 2013 - 23:29 Report Abuse
காயத்ரி இந்தத் திரைப்படத்தைப் பார்த்தேன், இதில் எங்கு எதைக் குறையாகப் பார்க்கிறார்கள் என்று இன்னும் புரியவில்லை. ஒரு திரைப்படத்தைப் படமாகப் பார்க்க வேண்டும், யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை..இந்தப் படத்தில் அந்தணப் பெண்கள் இருவர் அசைவம் சாப்பிடுவது போல் சித்திரித்திருப்பார்கள், உடனே அந்த சமுதாயம் கொந்தளிக்குமா? கதை, கதையைக் கதையாகப் பார்க்கும் துணிவு வேண்டும், இப்படி ஒவ்வொன்றிற்கும் போர்க்கொடி பிடித்தால் நாளை நல்ல படங்கள் வெளிவராமல் கதாநாயகனின் போற்றி பாடல்களையும் குத்துப் பாடல்களையுமே கேட்கும் நிலை ஏற்படலாம்..கற்பனை வறட்சியும் நேரலாம்..கமல் சிறந்த நடிகர், படைப்பாளி..அரிய முயற்சிகளைச் செய்து பார்க்கும் தொழில்பக்தி உள்ள நடிகர்..முயற்சிகளுக்கு அங்கீகாரம் இல்லையென்றால் அவரும் அரைத்த மாவையே அரைக்கச் செல்லும் நிலை நேரலாம்.தயாரிப்பாளராகக் கமலின் நிலையை யோசித்துப் பார்க்க வேண்டும், சர்ச்சையாகத் தோன்றும் காட்சிகளை நீக்கச் சொல்லியாவது வெளிவர அனுமதிக்க வேண்டும்..அது தான் கலைஞர்களுக்கு நாம் தரும் மரியாதை.
Rate this:
Rss - Mumbai,இந்தியா
28 ஜன, 2013 - 22:54 Report Abuse
Rss உங்க கூட நாங்க இருக்கோம் தலைவா நீங்க கவலை படாதிங்க ...விஸ்வரூபம் பார்ட் 2 பார்ட் 3 சீக்கிரம் வெளிவர வாழ்த்துக்கள்
Rate this:
Madurai akka - Madurai,இந்தியா
28 ஜன, 2013 - 22:05 Report Abuse
 Madurai akka அப்படி என்னபா இந்த படத்துல முஸ்லிம்களுக்கு எதிர இருக்குது? படத்த படமா பாருங்க மக்களே. எல்லதுலயுமா சாமிய சண்டைக்கு இழுக்குறது...... இனிமே Ella படத்தையுமே அவங்க கிட்ட கேட்டுதான் ரிலீஸ் பண்ணனும்னு சொல்லுவங்க்க் போல இருக்கே...
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in