அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி தமன்னா நடித்த படம் "பையா". இந்தப் படம் தற்போது தெலுங்கு, இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதன் கன்னட ரீமேக் உரிமையை நவீன், பிரேம் என்ற தயாரிப்பாளர்கள் பெற்றுள்ளனர். இதன் ரீமேக் உரிமை கட்டணமாக 15 லட்சம் கொடுத்துள்ளனர். கன்னட சினிமாவில் ஒரு படத்தின் ரீமேக் உரிமை இவ்வளவு பெரிய தொகைக்கு பெறப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. மகேஷ் பாபு என்பவர் இயக்குகிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது "எங்கள் மொழிக்கு ஏற்ப படத்தில் சில மாறுதல்களை செய்துள்ளோம். யுவன் இசையில் உருவான 5 பாடல்களில் மூன்று பாடல்களின் மெட்டுகளை அப்படியே பயன்படுத்துகிறோம். இரண்டு பாடல்களை புதிதாக சேர்க்கிறோம். யார் நடிப்பது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை" என்றார்.