திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
பார்த்திபனுடன் நடித்த வித்தகன் படத்துக்குப்பிறகு ஆந்திரா எல்லைக்குள் முகாமிட்டிருந்தார் பூர்ணா. குட்டையான நடிகை என்றாலும் குட்டை பாவாடை நடிப்புக்கு உத்தரவாதம் கொடுத்ததால் மீடியம் பட்ஜெட் தெலுங்கு படாதிபதிகளின் நம்பிக்கை நட்சத்திரமானார். அப்படி போன வேகத்திலேயே 4 படங்கள் அவரது பாக்கெட்டிற்குள் எகிறி குதித்தன. வாக்கு தவறாத பூர்ணாவோ, நடித்த படங்களில் பாத்து பாராமல் கவர்ச்சியை வாரி வழங்கினார். ஆனால் அவரது துரதிர்ஷ்டம் நடித்த படங்கள் எதுவுமே வெற்றி பெறவில்லை.
இதனால் சொல்லாமல் கொள்ளாமல் அங்கிருந்து மீண்டும் கோடம்பாக்கத்தில் தஞ்சமடைந்திருக்கிறார் பூர்ணா. வந்தவுடன், ஜன்னல் ஓரம் உள்பட சில படங்களை கைப்பற்றியிருக்கிறார். அதோடு, ஜெய்க்கு ஜோடியாக ஏற்கனவே அவர் நடித்து வந்த அர்ஜூனன் காதலி என்ற படமும் தற்போது திரைக்கு வரத்தயாராகி வருகிறது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் பூர்ணா, இந்த படத்தின் மூலம் தமிழிலும் கவர்ச்சி மூலம் தான் ஸ்கோர் பண்ணி விட வேண்டும் என்பதற்காக அதிரடி கிளாமர் நடிகையாக பிரவேசித்துள்ளார். சில காட்சிகளில் பூர்ணாவின் கட்டுக்கடங்காத கவர்ச்சியைக்கண்டு திக்குமுக்காடிப்போனாராம் ஜெய். இதுவரை எந்த நடிகையும் என்னை இப்படி மூச்சுத்திணற வைத்ததில்லை என்று நட்பு வட்டாரங்களில் சொல்லி பூர்ணாவின் பெருமையை அள்ளி விட்டு வருகிறார் நடிகர்.