டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
1963ம் ஆண்டு வெளிவந்த படங்கள் இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. யாரும் அதனை விழா நடத்திக் கொண்டாடப்போவதில்லை. இருந்தாலும் தினமலர் இணையதளம் அந்தப் படங்களை தன் வாசகர்களுக்கு நினைவுகூர்கிறது.
1963ம் ஆண்டு தமிழ் சினிமாவின் பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். காலத்தால் அழிக்க முடியாது இன்றைக்கும் தொலைக்காட்சிக்கு வருமானத்தை அள்ளித் தரும் பல படங்கள் 1963ம் ஆண்டு வெளியாகி இருக்கிறது. உலக நாயகன் கமல்ஹாசன், களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமானது இந்த ஆண்டுதான். அவரின் சினிமா பொன்விழா ஆண்டு இது. புன்னகை அரசி கே.ஆர்.விஜயா கற்பகம் படத்தில் அறிமுகமானதும் இந்த ஆண்டுதான். அந்த வகையில் அவருக்கும் இது பொன்விழா ஆண்டு. 1963ம் ஆண்டு சினிமா ரசிகனுக்கு கொண்டாட்டமான ஆண்டு. காரணம் எம்.ஜி.ஆர் படங்களும், சிவாஜி படங்களும் போட்டி போட்டுக் கொண்டு வெளிவந்து சகட்டுமேனிக்கு வெற்றியும் பெற்றன. சிவாஜியின் படங்கள் பேமிலி செண்டிமெண்டுடன் இருந்தது. எம்.ஜி.ஆர் படங்கள் காதல் மற்றும் ஆக்ஷன் படங்களாக இருந்தது.- இருவருமே தலா 10 படங்களில் நடித்திருந்தனர்.
எம்.ஜிஆர் நடித்த படங்களின் பட்டியல். (அடைப்புக்குறிக்குள் கதாநாயகி மற்றும் இயக்குனரின் பெயர்கள்)
1.ஆளப்பிறந்தவன் (மைனாவதி-நானாபாய் பகத்)
2.ஆனந்தஜோதி (தேவிகா-ஏ.எஸ்.ஏ.சாமி)
3.தர்மம் தலைகாக்கும் (சரோஜாதேவி-எம்.ஏ.திருமுகம்)
4.கலையரசி (பானுமதி-கே.காசிலிங்கம்)
5.காஞ்சித் தலைவன் (பானுமதி-ஏ.காசிலிங்கம்)
6.கொடுத்து வைத்தவள் (ஈ.வி.சரோஜா-பி.நீலகண்டன்)
7.நீதிக்கு பின் பாசம் (சரோஜாதேவி-எம்.ஏ.திருமுகம்)
8.பணத்தோட்டம் (சரோஜாதேவி-கே.சங்கர்)
9.பரிசு (சாவித்ரி-டி.யோகானந்த்)
10.பெரிய இடத்து பெண் (சரோஜாதேவி-டி.ஆர்.ராமண்ணா)
சிவாஜி நடித்த படங்கள்
1.அன்னை இல்லம் (தேவிகா-பி.மாதவன்)
2.அறிவாளி (பானுமதி-ஏ.டி.கிருஷ்ணமாச்சாரி)
3.சித்தூர் ராணி பத்மினி (வைஜயந்திமாலா-நராயணமூர்த்தி)
4.ரத்த திலகம் (சாவித்ரி-தாதாமிராசி)
5.இருவர் உள்ளம் (தேவிகா-எல்.வி.பிரசாத்)
6.கள்வனின் காதலி (சரோஜாதேவி-ஏ.கே.வேலன்)
7.குலமகள் ராதை (சரோஜாதேவி-ஏ.பி.நாகராஜன்)
8.குங்குமம் (விஜயகுமாரி&கிருஷ்ணன்-பஞ்சு)
9.பார்மகளே பார் (சவுகார்ஜானகி-ஏ.பீம்சிங்)
10.நான் வணங்கும் தெய்வம் (அஞ்சலிதேவி-கே.சோமு)
எம்.ஜி.ஆர், சிவாஜி தவிர ஜெமினி கணேசன், எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள், கைராசி, களத்தூர் கண்ணம்மா, மீண்ட சொர்க்கம், பார்த்திபன் கனவு, புதிய பாதை, வீரக்கனல், யானை பாகன் என 8 படங்களில் நடித்துள்ளார். இதுதவிர இந்த ஆண்டு வெளிவந்த ஸ்ரீதரின் நெஞ்சம் மறப்பதில்லை படமும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் கற்பகம் படமும் பெரிய வெற்றி பெற்றது. இந்த ஆண்டின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் சரோஜாதேவி. எம்.ஜி.ஆர், சிவாஜி இருவருக்குமே ஜோடியாக நடித்தார். இந்த ஆண்டு மொத்தம் 46 படங்கள் வெளிவந்துள்ளது. அவைகள் அனைத்திற்கும், உலக நாயகன் கமல்ஹாசன், புன்னகை அரசி கே.ஆர்.விஜயா ஆகியோருக்கும் 2013 பொன்விழா ஆண்டு. அவர்களுக்கு தினமலர் இணைய தளத்தின் வாழ்த்துக்கள்.