கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் |
சமீபகாலமாக ஹன்சிகாவுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் பெருகி வருகிறார்கள். அதில் சிலர் அவரிடம் நேரடி தொடர்பிலும் இருக்கிறார்கள். ஹன்சிகா நடித்த படங்களைப்பார்த்து விட்டு புகழ்ந்து தள்ளுவது. அவரது அழகை பக்கம் பக்கமாக வர்ணிப்பது என்பது ஒரு முக்கிய கடமையாகக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் எப்போது தன்னை போனில் தொடர்பு கொண்டு அந்த இனிப்பான வார்த்தைகளை சொன்னாலும், கேட்டு கேட்டு மனதை தெம்பாக்கிக்கொண்டு வந்தார் ஹன்சிகா.
ஆனால் அப்படி பேசிவந்த ரசிகர்களில், ஒரு மேலிடத்து பையன், திடீரென்று ஒருநாள் ஹன்சிகாவின் செல்போனுக்கு காதல் எஸ்எம்எஸ் அனுப்பி அதிர்ச்சி கொடுத்து விட்டாராம். அதன்காரணமாக, சத்தமில்லாமல் தனது செல்போன் நம்பரைகூட மாற்றியிருக்கிறார் நடிகை. இருப்பினும் எப்படியோ புதிய நம்பரையும் தெரிந்து கொண்டு, எனக்கு நல்ல பதிலாக சொல்லுங்கள் காத்திருக்கிறேன் என்று அடிக்கடி போன்போட்டு லவ் டார்ச்சர் கொடுத்து வந்தாராம். சிலநாட்களாக இதை பொறுத்து வந்த ஹன்சிகா, அந்த வாலிபரின் தொழிலதிபர் தந்தைக்கு போன்போட்டு மகனின் டார்ச்சர் பற்றி போட்டுக்கொடுத்து விட்டாராம். இதையடுத்து அந்த வாலிபர் ஆப்பாகி விட்டாராம். என்றாலும், எப்போது வேண்டுமானாலும் அவர் தனக்கு போன்போட்டு மீண்டும் டார்ச்சரை தொடரலாம் என்பதால், இப்போது தனது பர்சனல் போனை அட்டன் பண்ணகூட ஒரு ஆள் போட்டு வைத்திருக்கிறார் ஹன்சிகா.