Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வாழ்நாளில் மறக்க முடியாத நாள் - ரஜினியை சந்தித்த சிவகார்த்திகேயன் குஷி

30 மே, 2022 - 12:06 IST
எழுத்தின் அளவு:
Sivakarthikeyan-met-Rajini

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனது கடின முயற்சியால் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உயர்ந்துள்ளார். ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் படங்களுக்கு அடுத்தப்படியாக சிவகார்த்திகேயன் படம் சிறப்பான வசூலை குவித்து வருகிறது. குறிப்பாக அவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்ப ஆடியன்ஸ் அதிகம். கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்த டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்களுமே ரூ.100 கோடி வசூலை கடந்து சாதனை புரிந்தன. டான் படத்தை ரஜினி பார்த்து பாராட்டியதாக சிவகார்த்திகேயன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் ரஜினியை சிவகார்த்திகேயன் சந்தித்து பேசி உள்ளார். இதுதொடர்பான ஒரு போட்டோவை பகிர்ந்து சிவகார்த்திகேயன் கூறியதாவது : ‛‛இந்திய சினிமாவின் ‛டான்' சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்து அவரிடம் ஆசி பெற்றேன். 60 நிமிடங்கள், என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். உங்களின் பொன்னான நேரத்திற்கும், டான் படத்திற்கு நீங்கள் தெரிவித்த வாழ்த்திற்கும் நன்றி தலைவா'' என தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
'பிரேமம்' ஆண்டு விழாவைக் கொண்டாடிய அனுபமா பரமேஸ்வரன்'பிரேமம்' ஆண்டு விழாவைக் ... ‛இன்றைய வலி நாளைய வெற்றி' : சூரியின் மிரட்டலான சிக்ஸ் பேக் ‛இன்றைய வலி நாளைய வெற்றி' : சூரியின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

சொல்லின் செல்வன் - Bangalore,இந்தியா
31 மே, 2022 - 09:24 Report Abuse
சொல்லின் செல்வன் தலைவருக்கு பேன் இருக்க வாய்ப்பேயில்லயே ? தலையில முடி இருந்தாதான் பேன் வரும்
Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
30 மே, 2022 - 16:53 Report Abuse
sankar போர் வரும்போது நடிக்க போனவர் பற்றி செய்தி வேண்டாமே
Rate this:
kudiyanavan - coimbatore ,இந்தியா
30 மே, 2022 - 15:07 Report Abuse
kudiyanavan நூறு சதவிகிதம் கலப்படம் இல்லாத தலைவர் பேன் சிவா. தலைவரின் கலையுலக வாரிசு . தலைவரை போன்றே குணங்கள் கொண்டவர் . மேலும் வளர வாழ்த்துக்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in