Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விக்ரம் - மும்முனைப் போட்டியை சமாளிப்பாரா கமல்ஹாசன்?

25 மே, 2022 - 10:26 IST
எழுத்தின் அளவு:
Will-Kamalhaasan-overcome-the-three-way-contest?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ள 'விக்ரம்' படம் ஜுன் 3ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது. பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது மற்ற சிறிய படங்கள் அதற்குப் போட்டியாக வருவதைத் தவிர்ப்பார்கள். எனவே, பெரிய நடிகர்களின் படங்கள் போட்டியே இல்லாமல் ஓடும்.

கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' படத்திற்கு தமிழில் எந்தப் போட்டியும் இல்லை. ஆனால், ஹிந்தி, தெலுங்கு, மலையாளத்தில் போட்டி ஏற்பட்டுள்ளது. ஹிந்தியில் அன்றைய தினம் அக்ஷய்குமார் நடித்துள்ள 'பிருத்விராஜ்' படமும், தெலுங்கில் அடவி சேஷ் நடித்துள்ள 'மேஜர்' படமும், மலையாளத்தில் நிவின் பாலி நடித்துள்ள 'துறைமுகம்' படம் வெளியாக உள்ளது. இப்படி மூன்று மொழிகளில் அவர் மும்முனைத் தாக்குதலில் இருந்து சமாளித்தாக வேண்டும்.

மூன்று மொழிகளிலும் முக்கிய படங்கள் வெளியாவதால் 'விக்ரம்' படத்திற்கு அங்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வெளியீட்டிற்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் கமல்ஹாசன் மட்டுமே படத்தின் பிரமோஷனில் இறங்கியுள்ளார். பகத் பாசில், விஜய் சேதுபதி இருவரும் வெவ்வேறு படங்களில் பிஸியாக நடிக்க வேண்டியுள்ளதால் அவர்கள் 'விக்ரம்' பட பிரமோஷனில் அதிகம் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
சென்னைக்கு திரும்பிய நடிகர் விஜய்சென்னைக்கு திரும்பிய நடிகர் விஜய் கார்த்தியின் ‛சர்தார்' தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிப்பு கார்த்தியின் ‛சர்தார்' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Krishnan - Bengaluru,இந்தியா
29 மே, 2022 - 16:24 Report Abuse
Krishnan 'ர்ர்ர்' படம் பீஸ்ட் படத்தையும் தாண்டி தனது கதையாகவும் நடிப்பு மற்றும் சிறந்தமுறையில் படமாக்கப்படடத்தார்க்கும் சேர்த்து மிக சிறந்த முறையில் வெற்றி பெற்றது. ஆகவே சிறந்தமுறையில் படமாக்கப்பட்டால் விக்ரம் தமிழ்பாடமும் வரலாறு படைக்கும்.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
25 மே, 2022 - 21:13 Report Abuse
Sanny கமல் சார் கவலையே படமாட்டார். ஏன்னா இந்திய மக்கள் சாப்பிட பணம் இல்லாவிட்டாலும், ஏன்னதான் நோய் வந்தாலும், சிக்கெட் மேட்ச் எதனை இருந்தாலும், எதனை படங்கள் ரிலீஸ் ஆனாலும் பார்க்காமல் விட மாட்டாங்க.
Rate this:
26 மே, 2022 - 07:34Report Abuse
Saminathan Yes. அப்படியே சினிமா நியூஸ் படிச்சுத்து comments போடாமலும் இருக்க மாட்டாங்க...
Rate this:
25 மே, 2022 - 14:54 Report Abuse
மாதேஸ்வரன் Rajini, Vijay, Ajit are scared to face the competition from others, so they go solo.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in