Advertisement

சிறப்புச்செய்திகள்

விஸ்வரூபம் படத்திற்கு தடை

23 ஜன, 2013 - 21:30 IST
எழுத்தின் அளவு:

  சென்னை :  விஸ்வரூபம் படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.கமல் நடித்து, இயக்கி, தயாரித்துள்ள விஸ்வரூபம் படம் விரைவில் திரையரங்குகளில், வெளியாகிறது. டி.டி.எச்., சேவையில், பிப். 2ம் தேதி, வெளியிடப்படுகிறது. இதற்கிடையே, "விஸ்வரூபம் படத்தில், முஸ்லிம்களை தீவிரவாதிகள் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. எனவே, படத்தை வெளியிடுவதற்கு முன், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு படத்தை திரையிட வேண்டும். விமர்சனத்துக்குரிய காட்சிகள் இருந்தால், அவற்றை நீக்கிவிட்டு, படத்தை வெளியிட வேண்டும் என, முஸ்லிம் அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நடிகர் கமல், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு படத்தை திரையிட்டுக் காட்டினார். படத்தை பார்த்த முஸ்லிம் அமைப்பினர், முஸ்லிம்கள் தீவிரவாதிகள் போல் சித்தரிக்கப்பட்டு உள்ளனர். எனவே, படத்தை தடை செய்யவேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

விஸ்வரூபம் தடை செய்ய வேண்டும் என, சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் உள்துறை செயலரிடம், முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு மனு அளித்துள்ளது.இப்படத்தை எதிர்த்து 23ம் தேதி(வியாழன்) மாலை ஆர்பாட்டம் நடத்தப் போவதாக, முஸ்லிம் அமைப்புகள் கூறியிருந்தன. ஒரு வேளை படம் வெளியிடப்பட்டால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுமா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இந்நிலையில்,இப்படத்தை வெளியிட, 15 நாட்கள் தடை விதிக்குமாறு, அரசு தரப்பில் இருந்து, மாவட்ட கலெக்டர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட கலெக்டர்களும், இப்படத்திற்கு, 15 நாட்களுக்கு வெளியிட தடை விதித்துள்ளனர்.இந்த, 15 நாட்களில், விஸ்வரூபம் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விட்டு, அதன் பின் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இது குறித்து, இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.

Advertisement
கருத்துகள் (67) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (67)

30 ஜன, 2013 - 03:51 Report Abuse
 முஹம்மத் நிசமுடீன் Mr டுபாகூர் ரவி, மோடி எப்படி 3வது முறையா ஆட்சிக்கு வந்தார் என்று குஜராத் மக்களுக்கும் தேர்தல் கமிஷனுக்கும் நன்றாவே தெரியும். ஒருவேளை நீங்கள் தூங்கி கொண்டு இருந்தீர்களோ தெரியவில்லை. நீங்கள் ஒரு வேலை செய்யுங்கள், மோடியிடமே கேளுங்கள் நீங்கள் ஜனநாயக முறையில் தான் ஜெயித்தீர்களா என்று?
Rate this:
டுபாக்கூர் ரவி - chennai,இந்தியா
26 ஜன, 2013 - 11:28 Report Abuse
 டுபாக்கூர் ரவி திரு. முஹம்மத் நிஜாமுதீன் - Fahaheel ,குவைத், நீங்கள் சொல்வது உண்மையாகவே இருக்கட்டும், அப்போ மோடி எப்படி ஜெயித்து 3 ஆவது முறை முதல்வர் ஆனார்.... இந்த சப்ப கட்டு கட்டுறத விட்டு வேற வேலைய பாருங்க சார் ,............
Rate this:
26 ஜன, 2013 - 02:42 Report Abuse
 முஹம்மத் நிஜாமுதீன் சரிடா அறிவு ஜீவிகளா! இப்பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி. நான் குஜராத் பற்றியும் நரேந்திர மோடி பற்றியும் படம் எடுக்குறேன். நீங்கள் அனைவரும் பார்க்க தயாரா?
Rate this:
ராம ராஜ் - CHENNAI,இந்தியா
25 ஜன, 2013 - 12:43 Report Abuse
 ராம ராஜ் கமல் செய்த தவறு படத்தினை அவர்களுக்கு திரையீட்டு காட்டியது....
Rate this:
கார்த்திக் - Thanjavur,இந்தியா
25 ஜன, 2013 - 10:02 Report Abuse
 கார்த்திக் கமல் தமிழ்நாட்டின் பொக்கிஷம்...சினிமாவை சினிமாவாக மட்டும் பாருங்கள்...விஸ்வரூபத்தை தடை செய்வது என்பது எல்லோரும் வெட்கித் தலை குனிய வேண்டிய விஷயம்...
Rate this:
மேலும் 62 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in