Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குரு-சிஷ்யன் போட்டி! வெற்றி யாருக்கு?

23 ஜன, 2013 - 12:05 IST
எழுத்தின் அளவு:

பிப்ரவரி, 1ம் தேதி, தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு, ரொம்பவே ஸ்பெஷலான நாள். நீண்ட இடைவெளிக்கு பின், பிரபல இயக்குனர் மணிரத்னம், தமிழில் நேரடியாக இயக்கும், "கடல்  படம், அன்று தான், வெளியாகப் போகிறது. கவுதம் கார்த்திக், துளசி நாயர் போன்ற புதுமுகங்களுடன், அரவிந்த்சாமி, அர்ஜுன் போன்ற, அனுபவ நட்சத்திரங்களும் நடித்துள்ள படம் என்பதாலும், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள படம் என்பதாலும், ரசிகர்களிடையே, இந்த படத்துக்கு, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடலோர கிராமத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து, தயாராகியுள்ளது.

இதே நாளில், "டேவிட் என்ற படமும் வெளியாகிறது. விக்ரம், ஜீவா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படமும், கடலோர பகுதிகளை மையமாக வைத்துத் தான், தயாராகியுள்ளது. தமிழில் மட்டுமல்லாது, இந்தியிலும் இந்த படம் வெளியாகிறது.  "டேவிட் படத்தை இயக்கும் பிஜேய் நம்பியார், இயக்குனர் மணிரத்னத்திடம், உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்த படத்தின் தயாரிப்பாளர், மணிரத்னத்தின் உறவினரான, சாரதா திரிலோக். இப்படி, பல ஒற்றுமைகளுடன் உள்ள, இந்த இரண்டு படங்களும், ஒரே தேதியில் வெளியாவதால், "இந்த படங்களின் வசூல் பாதிக்கப்படாதா என, கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது.
 
சினிமா என்பதும், சில நேரங்களில் சூதாட்டம் போன்றது தான். நல்ல கதை, இனிமையான பாடல், சிறப்பான நடிப்பு, நவீன தொழில் நுட்பங்கள் என, பல விஷயங்கள், திரைப்படங்களின் வெற்றிக்கு, அடையாளமாக திகழ்ந்தாலும், நேரமும் நன்றாக இருக்க வேண்டும் என்கின்றன, கோலிவுட் வட்டாரங்கள். பிப்ரவரி, 1ம் தேதி,  குரு - சிஷ்யனுக்கு இடையே நடக்கும் போட்டியில், வெற்றி பெறப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Venkat - Bangalore  ( Posted via: Dinamalar Android App )
23 ஜன, 2013 - 23:13 Report Abuse
Venkat waiting for david .. vikram rocks !!
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in