Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கியது : கமல் உள்ளிட்ட திரைக்கலைஞர்கள் பங்கேற்பு

18 மே, 2022 - 11:11 IST
எழுத்தின் அளவு:
Cannes-Film-Festival-2022-begins

75வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று தொடங்கியது. 75வது விழா என்பதால் வழக்கத்தை விட கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவின் புதுமையாக விளையாட்டு போட்டிகளில் ஒவ்வொரு நாட்டு அணியினரும் தேசிய கொடி பிடித்து அணிவகுத்து வருவது போன்று பல்வேறு நாட்டை சேர்ந்த திரை கலைஞர்கள் தனித்தனியாக ரெட் கார்பெட்டில் அணிவகுத்து வந்தார்கள்.

அதன்படி இந்திய அணியில் நடிகைகள் தீபிகா படுகோன், பூஜா ஹெக்டே, தமன்னா, இசை அமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், ரிக்கி கெஜ் உள்ளிட்டோர் அணிவகுத்து வந்தனர். இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது.



குறிப்பாக தமிழ்நாட்டுக்கு மூன்று பெருமையான விஷயங்கள் உள்ளன. மாதவன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள ராக்கெட்டரி, கமல் நடித்து, தயாரித்துள்ள விக்ரம், பார்த்திபன் நடித்து, தயாரித்துள்ள இரவின் நிழல் ஆகிய 3 படங்கள் திரையிடப்படுகிறது. இதற்காக கமல்ஹாசன், மாதவன், பார்த்திபன், இவர்களுடன் இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோரும் கேன்ஸ் சென்றுள்ளனர்.



துவக்க விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் பேசியதாவது: 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் முதன்முறையாக இந்தியா கவுரவத்துக்குரிய நாடு என்ற முக்கியத்துவத்தைப் பெறுகிறது. தற்போது மீடியாக்களும், சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்து வருகின்றன.



இந்தியாவின் ஓடிடி சந்தை 2023ம் ஆண்டுவாக்கில் 21 சதவீதம் வளர்ச்சி அடைந்து, ஆண்டு வருவாய் ரூ.12,000 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையின் வணிகத்தில் நாம் வேகமாக முன்னேறி வருகிறோம். இது விரைவாக வளர்ந்து வரும் துறை என்ற முறையில், 2025க்குள் ஆண்டுக்கு ரூ.24 ட்ரில்லியன் வருவாயை உருவாக்கி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அனைத்து ஹீரோ படங்களும் வெளியாகும் ஆண்டாக 2022 அமையுமா?அனைத்து ஹீரோ படங்களும் வெளியாகும் ... பட்டாம்பூச்சியில் ரத்தம் தெறிக்கும் சைக்கோ பாடல் பட்டாம்பூச்சியில் ரத்தம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Sridhar - Jakarta,இந்தோனேசியா
18 மே, 2022 - 13:21 Report Abuse
Sridhar ஒரு காலத்துல பெரிய நடிகரா இருந்த கமலாஹாசனின் நிலையை இன்று பார்த்தால் பரிதாபமாக இருக்குது காப்பி அடிப்பதை தவிர வேறு திறமைகளை வளர்த்துக்கொள்ளாததால், ஆஸ்கார் என்பது கனவாகிப்போக, திறமை சாலியான ரஹ்மான் அதை தட்டிக்கொண்டு செல்ல, சரி அரசியல் சென்று அங்கேயாவது எதையாவது கிழிக்கலாம்னு நினைத்தால், அங்கேயும் ஒரு பெண் வில்லியாய் வந்து ஆப்படிக்க, சென்ற இடமெல்லாம் அவமானம் என்றால், அந்த மனிதன் பாவம் என்னதான் செய்வார்?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in