ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தனது மகன் கவுதமை, மணிரத்னத்தின் "கடல் படத்தில் அறிமுகம் செய்து விட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் கார்த்திக். "பாரதிராஜாவின் கையால் குட்டுபட்டு, நான் பெரிய நடிகரானதை போல், என் மகனும் கண்டிப்பாக பெரிய நடிகனாவான் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே உள்ளது என்று சொல்லும் கார்த்திக், மகனுக்கு நடிப்புப் பயிற்சி மட்டுமின்றி, கிக் பாக்சிங் பயிற்சியும் கொடுத்துள்ளாராம். மேலும், "கடல் படத்தில் நடிப்பதற்கு முன், இன்னும் கொஞ்சம் உடல் பிட்டில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மணிரத்னம் கூறியதும், உடனே கவுதமை அர்ஜுனிடம் அனுப்பி வைத்தாராம் கார்த்திக். அவர் தான், ஒரு ஹீரோவுக்கு உரிய பிட்டிங் எப்படி இருக்க வேண்டும் என்று, கவுதமுக்கு பயிற்சி கொடுத்து மணிரத்னம் முன் கொண்டு போய் நிறுத்தினாராம்.