Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகருக்கு 'கெட் அவுட்' சொன்ன செய்தி வாசிப்பாளர்

03 மே, 2022 - 10:54 IST
எழுத்தின் அளவு:
News-Reader-says-Getout-to-actor-during-interview

தெலுங்கில் 2020ம் ஆண்டு வெளிவந்து சிறப்பான வரவேற்பைப் பெற்ற ஒரு படம் 'ஹிட்'. அந்தப் படத்தில் நாயகனாக நடித்த விஷ்வக் சென் நடித்து அடுத்து 'அசோகவனம்லோ அர்ஜுன கல்யாணம்' என்ற படம் வெளிவர உள்ளது. அப்படத்திற்காக ஒரு யு டியூபரை வரவழைத்து ஐதராபாத் வீதிகளில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு அந்த யு டியூபர் தற்கோலை செய்து கொள்வது போல 'பிரான்க்' நிகழ்ச்சியை நடத்தினர். அதற்கு சமூக ஆர்வலர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. விஷ்வக் சென் மீதும் வழக்குகள் போடப்பட்டது.

அது குறித்து விவாதிக்க விஷ்வக் சென்னை தெலுங்கு செய்தி சேனலான டிவி 9 விவாதம் ஒன்றிற்கு அழைத்தது. அப்போது விஷ்வக் மீது சில குற்றச்சாட்டுக்களை வைத்தார் செய்தி வாசிப்பாளர் தேவி நாகவள்ளி. அதனால் கோமடைந்த விஷ்வக் சென் பேசும் போது ஒரு பெரிய கெட்ட வார்த்தையை நேரலையின் பயன்படுத்தினார். அதைக் கேட்டு கோபமடைந்த செய்தி வாசிப்பாளர் தேவி நாகவள்ளி, விஷ்வக் சென்னை ஸ்டுடியோவை விட்டு வெளியேறும்படி 'கெட் அவுட்' சொன்னார். தேவி அவரது செயலில் பிடிவாதமாக இருந்ததால் வேறு வழியில்லாமல் மைக்கை கழட்டி வைத்து விஷ்வக் சென் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்த விவகாரம் தெலுங்குத் திரையுலகத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஹிந்தி படம் தான் இந்திய சினிமாவா? - தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஆவேசம்ஹிந்தி படம் தான் இந்திய சினிமாவா? - ... ரூ.1000 கோடி மேல் வசூல் : சம்பளத்தை உயர்த்திய பிரசாந்த் நீல் ரூ.1000 கோடி மேல் வசூல் : சம்பளத்தை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Neelan - chengelpet,இந்தியா
05 மே, 2022 - 10:07 Report Abuse
Neelan முற்பாதி செய்தி உண்மை. பிற்பாதியில் தவறு உள்ளது. நாகவல்லி, அந்த நடிகரை (விஷ்வக் சென்) மனநிலை (பாகல் சென்) பாதிக்கப்பட்டவர் என்றும் depressed என்றும் அவரை அறிமுகம் செய்து தனிமனித தாக்குதல் செய்தார். அதற்கு யாராக இருந்தாலும் கோபப்படுவார்கள். வளர்ந்து வரும் நடிகர் ஒருவரை studio வரவழைத்து அவமானம் செய்வது மிகவும் தவறு.
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
03 மே, 2022 - 20:25 Report Abuse
கல்யாணராமன் சு. இந்த கேடு கேட்ட பிரான்க் நிகழ்வுலே தொலைக்காட்சியில் விவாதிக்க என்ன இருக்கு ? இந்த மாதிரி ஒரு தேவையில்லாத, தகுதியில்லாத விவாதங்களை நடத்துவதன் மூலம், நாம் சினிமாக்காரர்களுக்கு அடிமையாகத்தான் இருக்கிறோம் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறோம் .........
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in