கொஞ்சம் வயதாகி வருவதால் இரவு நேரங்களில் இசையமைப்பதில்லை-ஏ.ஆர்.ரஹ்மான் | கேன்ஸ் படவிழாக்குழுவினரை கவர்ந்த ஐஸ்வர்யா ராய் மகள்! | ஷாங்காய் விழாவில் கமலின் பேசும் படம்! | சித்தார்த்துடன் மீண்டும் இணைகிறார் சமந்தா! | மரியானின் திகில் அலை இன்னமும் மனசுக்குள்ள அடிச்சிக்கிட்டேயிருக்கு! -சொல்கிறார் தனுஷ் | வடிவேலு ரீ-என்ட்ரி! சந்தானம் உள்ளிட்ட காமெடியன்களுக்கு அதிர்ச்சி! | நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க! ஹன்சிகாவிடம் கரைந்த கவர்னர் | ஷார்மியின் 12 வருடகலை சாதனை | இந்தியில் நடிக்க நேரமில்லை! - டாப்ஸி | ஒரே படத்தில் மூன்று சரவெடி |
இப்போதெல்லாம் ஒரு படத்தை ஓட வைக்க வேண்டும் என்றால் கதை மட்டும் போதாது. சம்பந்தப்பட்ட படத்தைப்பற்றி ஏதேனும் ஒருவகையில் பரபரப்பான செய்திகள் வெளியாக வேண்டும். அப்போதுதான் இன்று அவசரகதியில் இயங்கிக்கொண்டிருக்கும் மக்களை திரும்பிப்பார்கக் வைக்க முடியும். அதனால்தான் சமர் படம் வெளியாவதற்கு முன்பு எத்தனையோ தடைகள், பிரச்சினைகள் இருந்தும் அப்போது அதைப்பற்றி எதுவும் பேசாத விஷால் இப்போது அப்படம் திரைக்கு வந்திருக்கும நேரத்தில் பப்ளிசிட்டிக்காக புதுப்புது விசயங்களை பரபரப்பாக வெளியிட்டு வருகிறார்.
அதாவது, சமர் படத்திற்கான தேங்காய் உடைத்து பூஜை போட்ட நாளில் இருந்து பூசணிக்காய் உடைக்கிற நாள் வரை ஒவ்வொரு பிரச்சினைகளாக உருவெடுத்துக்கொண்டிருந்தது. அதையடுத்து படத்தை தியேட்டருக்கு கொண்டு வருவதில் ஏகப்பட்ட சிக்கல். எதிர்பார்த்தபடி தியேட்டர்கள் கிடைக்கவில்லை. அதற்கு எதிர்ப்பாக ஒரு கூட்டமே செயல்பட்டது. ஏன் எதற்காக அப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இப்போது அத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி படம் திரைக்கு வந்து விட்டது. அதோடு, படிப்படியாக படத்திற்கான வசூல் கூடிக்கொண்டே வருகிறது. அதனால், இப்போது இதுவரை படத்தை வெளிக்கொண்டு வருவதற்காக போராடிய களைப்பு போய் விட்டது. மாறாக, படத்தின் வெற்றி காரணமாக சந்தோஷ களிப்பு தொற்றிக்கொண்டுள்ளது என்கிறார்.
அவரிடத்தில் அப்படி உங்களுக்கு எதிர்ப்பாக செயல்பட்டது யார்? என்று கேட்டால், அதுதான் தெரியவில்லை. அப்படி தெரிந்திருந்தால்தான் பிரச்சினை இருந்திருக்காதே. யாரோ முகம் தெரியாத நபர்கள்தான் சமர் படத்தை வெளிக்கொண்டு வருவதற்கு தடையாக இருந்தார்கள் என்று சூசகமாக பதில் அளிக்கிறார் விஷால்.